மயக்கியிழுக்கும் ஆவிகள் Jeffersonville, Indiana, USA 55-0724 1காலை வணக்கம், நண்பர்களே. இக்காலை இங்கிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி, உங்களை முழுவதுமாக பார்க்கையில் இன்று நம்முடன் கர்த்தர் இருக்கிறார் என்றும், நமக்கு ஒரு சிறிய நிழலை தருகிறார் என்றும் விசுவாசிக்கிறேன், காலை ஆராதனைக்கு இங்கு மிக உஷ்ணமாக இருக்காது. ஆகவே இப்பொழுது நாம்... நான் நம்புகிறேன், அங்கே பிள்ளைகள்... பிள்ளைகள் தங்கள் வகுப்புகள் முடிந்து அனுப்பப்பட்டுவிட்டார்களா, சகோதரன் நெவில்? சில சிறு பையன்களை நான் பார்த்தேன். அவர்களுடைய வகுப்புகள் முடிக்கப்பட்டு அவர்களை மற்ற இடங்களுக்கு, அவர்களுடைய ஞாயிறு பள்ளி அறைக்கு அனுப்பப்பட்டுவிட்டனரென்று நான் எண்ணுகிறேன். 2இப்பொழுது, எனக்காக ஜெபியுங்கள். கடந்த இரவு நான் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் இன்று நான் செய்துதான் ஆக வேண்டும் என்று ஒரு மகத்தான தீர்மானத்தை நான் கொண்டிருக்கிறேன். ஆகவே சபை தாமே ஜெபிக்கட்டும். அதுதான் சரியாக ஜெர்மனியிலுள்ள இரும்புத்திரை எல்லைக் கோட்டில் ஒரு கூட்டத்தை நான் நடத்த வேண்டியவனாகவுள்ளேன், அது சற்று பதற்றத்தையுடையதாக இருக்கிறது. ஆகவே எனக்காக ஜெபியுங்கள். ஆகவே அது, போருக்கு முன்னால் ஹிட்லர் கட்டின அந்த பெரிய, எண்பதாயிரம் மக்கள் அமரத்தக்க அந்த பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நாம் நேராகத் துவங்கப் போகிறோம். தொடர்ந்து பத்து இரவுகளுக்கு நாம் அதைக் கொண்டிருக்கலாம். அங்கே உடனே துவங்க நாங்கள் நம்புகிறோம், பிறகு பிரான்ஸில் உள்ள லாஃபோன்டைனுக்கு அடுத்ததாக, பெர்லினுக்கு திரும்ப வந்து... இல்லை, அதற்கிடையில் பெர்லின் மற்றும் - மற்றும் பிரான்ஸ். 3பிறகு நாங்கள் திரும்ப வருகிறோம், கர்த்தருக்கு சித்தமானால், சிக்காகோவில் நடக்க இருக்கும் கன்வென்ஷன் கூட்டத்தில், ஸ்வீடிஷ் சபையில் நடக்கவிருக்கும் கன்வென்ஷனில், சிக்காகோவில் என்னுடைய பாகமானது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது என்று துவங்குகிறது. ஆகவே அப்பொழுது அவர்கள், திரு. போஸ், சிக்காகோவில் சுற்றியுள்ள உங்களில் சிலர், ஆகஸ்ட் துவக்கத்தில், அல்லது செப்டெம்பர் துவக்கத்தில் ஸ்வீடனில் அடுத்ததாக வரவிருக்கும் ஒரு கன்வென்ஷனை அவர்கள் கொண்டிருக்கின்றனர். நான் வர வேண்டுமென்று அவர்கள் எனக்கு அளித்த ஓட்டுகள் பொதுவானதாகவும் நூறு சதவீதமாகவும் இருந்தது என்று நான் அறிந்த போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அதைக் குறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன், ஆனால் இப்பொழுது நான் ஒன்று அங்கு அல்லது இங்கு செல்ல வேண்டியவனாக இருக்கிறேன். எங்கே அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுமோ, எங்கே தேவனுடைய ராஜ்ஜியத்திற்கும் சிறந்த ஒன்று எங்கு நடக்குமோ அங்கே என்னை கர்த்தர் நடத்தத் தக்கதாக நீங்கள் ஜெபியுங்கள். இப்பொழுது அங்கே ஸ்வீடனில் ஒரு கன்வென்ஷனைக் கொண்டிருக்கிறார்கள், கன்வெஷனில் இருபத்தைந்து, முப்பத்தைந்தாயிரம் மக்களை நாம் பெற்றிருப்போம், அதில் அநேகர் இரட்சிக்கப்படாதவர்கள் என்று அவர் கூறினார். ஆகவே இங்கே ஜெர்மனியில், நல்லது, எண்பதாயிரம் பேரை கொள்ளத் தக்க ஒரு அரங்கத்தை அவர்கள் கொண்டிருக்கின்றனர். நாங்கள் சற்று முன்பு சென்று வந்த ஸ்விட்சர்லாந்தில் ஒரு அற்புதமான கூட்டத்தை அங்கே நாங்கள் கொண்டிருந்தோம், உங்களில் அநேகர் ஒருக்கால் அதைக் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். கர்த்தர் எங்களை அதிகமாக ஆசீர்வதித்தார், ஸ்விட்சர்லாந்திலுள்ள ரிச்சில் ஐந்து இரவுகளில் ஐம்பதாயிரம் பேர் மனம்மாறினர். 4ஆகவே, சகோதரன் ஜாக் ஷீலர், உங்களில் அநேகர் அவரை அறிந்திருக்கிறீர்கள், அவர் ஒரு மெத்தோடிஸ்ட், பழைய பாப் வீலரின் மகன். இவர்கள் இப்பொழுது பெல்ஃபாஸ்டில் இருக்கின்றனர், மேலும், மேலும் அந்த இடத்தில் சுவிசேஷத்திற்காக அவர்கள் அந்த இடத்தை தலைகீழாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர், பில்லிகிரஹாம் தன்னுடைய கூட்டத்தில் கொண்டிருந்ததை விட இன்னும் அதிகமாக. ஜாக் ஒரு மிக அருமையான வாலிப பையன் ஆவார், உற்சாகம் அன்பு நிறைந்த ஒருவர். கர்த்தருடைய மகத்தான ஊழியக்காரன் என்று நான் நம்பத் தக்கதாக அவர் - அவர் மிக உத்தமமாக இருக்கின்றார். ஆகவே சகோதரன் ஷீலருக்காக ஜெபியுங்கள். மேலும், மேலும் அது ஜாக் ஷீலர், மற்றும் ஜாக் மெக் ஆர்த்தரும் கூட ஒரு மகத்தான பிரசங்கி ஆவார். ஆகவே அங்கே சபை மக்கள் ஐயர்லாந்தில் நடைபெற்ற எழுப்புதலில் மிக மகத்தான எழுப்புதல் அது தான் என்று கூறுகின்றனர். ஆகவே நாங்கள்... அந்த - அந்த மனிதருக்காக சென்று தினமும் ஜெபியுங்கள். அவர்கள் இருவரும் வாலிப மனிதர், சுமார் நாற்பது வயதிற்கு கீழ் இருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன் அவர்களுக்குக் குடும்பங்கள் உண்டு. அவர்கள் அருமையான ஸ்திரமான சுவிசேஷ போதகர்கள், நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். ஆகவே இப்பொழுது நீங்கள் நான் கூறினதை மறக்கக் கூடாதென்றும், சரியாக இப்பொழுதே அந்த சரியான தீர்மானத்தை செய்ய தேவன் என்னை அனுமதிக்க நான் - நான் ஜெபிக்கிறேன். எந்த வழியாக திரும்ப வேண்டுமென்று தெரியாதிருக்கிற காலங்கள் உங்களுக்கு இருக்கும். அவ்விதமான சூழ்நிலைகளில் நீங்கள் சென்றிருக்கிறீர்களா? ஒரு சமயம் பவுல் அந்த விதமான ஒரு இடத்தை அடைந்தான், அப்படித்தானே? அது இரண்டு நீர்க் கால்களுக்கு இடையே இருப்பது போல. அவன் சென்று கொண்டிருந்தபோது, என்ன, தரிசனத்தில் ஒரு தூதன் ''மக்கெதோனியாவிற்கு வா'' என்று கூறுவதைக் கண்டான். ஆகவே கர்த்தர் இன்னுமாய் தம்முடைய தூதனைக் கொண்டிருக்கிறார், அப்படித் தானே? பவுல் எப்படியிருந்தானோ அதே விதமாக நான் என்னுடைய இருதயத்தில் தாழ்மையாக இருப்பேனானால்... 5ஆகவே இப்பொழுது, இன்றிரவு, கூடாரத்தில் இங்கே இருக்கின்ற சுவிசேஷ ஆராதனைகளை நினைவில் கொள்ளுங்கள், எல்லோரும் வாருங்கள். லூயிவில்லை சுற்றிலும் இருக்கிறவர்களே, திறந்த வாசலின் சபையில், சகோதரன் காப்பில்ஸின் இடத்தில் இரண்டு மணி நேரம் ஏழரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரை நான் பேசவிருக்கிறேன். அவர் மிக அருமையான மனிதன், அவர் என்னை அழைத்தார். ஆகவே சகோதரன் காப்பில்ஸ், அவர் ஒரு அருமையான நல்மனிதன், சகோதரனை உங்களுக்கு தெரியுமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன், அதை போன்று அவரை அப்படியே விட்டுவிட முடியாது. ஜெபியுங்கள். எல்லா காரியங்களுக்கும் மேலாக, ஜெபியுங்கள், சரியான தீர்மானத்தைச் செய்ய தேவன் நமக்கு அருளத் தக்கதாக ஜெபியுங்கள். இப்பொழுது, சுவிசேஷ செய்தியை நாம் துவங்கும் முன்னர், இக்காலையில், நாம் சிறு பிள்ளைகளை பிரதிஷ்டை செய்யப் போகிறோம். கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்யப்படத் தக்கதாக நானும் கூட ஒரு சிறுவனைக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, அநேக சமயங்களில் அநேக சபைகளில்... உங்களால் கேட்க முடிகிறதா, பின்புறத்தில் உங்களால் முடிகின்றதா, சரியாக இருக்கின்றதா? இங்கே இருக்கின்ற இந்த மின் விசிறிகள், உங்களையே உங்களால் கேட்க முடியாது. இல்லை, அது, அது சரி. அது இல்லாமல் நான் அழிந்து போய்விடுவேனென்று நான் ஐயமுறுகிறேன். 6ஆகவே இந்த - இந்த சிறுபிள்ளைகள், சில சமயங்களில் இவை சிறு பச்சிளம் குழந்தைகளாக இருக்கையில், சபையில் இவைகளுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் அளிக்கிறார்கள். மேலும் கூறப்போனால், அது கத்தோலிக்க சபையிலிருந்து வருகின்றதாயிருக்கின்றது, இந்த சிறியவைகளை பெயர் சூட்டுவதன் மூலம், அல்லது “ஞானஸ்நானம் கொடுத்தல்” என்று சிறிய குழந்தைகளாக இருக்கையில் அவர்கள் அழைக்கின்றனர். சிறு குழந்தை ஞானஸ்நானத்தை மெத்தோடிஸ்ட் சபை கொண்டு வந்தது, இன்னும் அநேக , இன்னும் அநேக காரியங்களை என்று நான் நினைக்கிறேன். சிறு குழந்தை ஞானஸ்நானம் பற்றி, பிறகு சிறு பிளவுகள் இன்னும் மற்றவை நசரீன் மற்றும் பழைமை நாகரீக மெத்தோடிஸ்ட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அது தான் என்று நான் நினைக்கிறேன். ஆனால், எந்தவித வழியானாலும், அது இல்லை, அது எந்தவித ஒரு பொருட்டும் அல்ல. ஏனெனில், கூறப்போனால், சரியாக அங்கே, அவை எல்லாவற்றிற்கும் கல்வாரி காரியத்தை தெளிவாக்கினது, ஏனெனில் சிறு பிள்ளைகளை, உலகத்தை இரட்சிக்கவே இயேசு அங்கே மரித்தார். 7ஆகவே ஒரு சிறு குழந்தை, அது எந்த விதமான பெற்றோரையுடையதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பாவமுள்ளவர்களாயிருந்தாலும் சரி, அது எந்தவித வித்தியாசத்தையுமே உண்டாக்காது, ஏனெனில் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் அவனை சுத்திகரிக்கின்றது, பாருங்கள், உலகத்தின் பாவமனைத்தையுமே எடுத்துப் போடுகின்ற தேவாட்டுக்குட்டி இதுதான். குழந்தையால் மனந்திரும்ப முடியாது. எப்படி மனந்திரும்ப வேண்டுமென்று அதற்குத் தெரியாது. அது இங்கே இருப்பதற்கான அதனுடைய சொந்த காரணங்கள் அதற்கு கிடையாது. அது ஏன் இங்கே இருக்கின்றது என்பதை உன்னால் அதனிடம் கூற முடியாது. ஆனால் தேவன் அதை இங்கே அனுப்பினார், அது உலகத்திற்கு வந்த அந்த ஷணத்திலேயே இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது அதை சுத்திகரிக்கின்றது. அது சொந்த கணக்கொப்புவிக்கும் வயத்திற்கு வரும் வரைக்கும் தான், பிறகு அது நன்மை தீமையை அறிந்து கொள்கின்றது, பிறகு அது செய்வது என்னவென்றால், அது தவறு செய்திருப்பதை அது அறியும் போது அது மனந்திரும்ப வேண்டியதாயிருக்கின்றது. அது சரி. ஆகவே சிலர் அவைகளுக்கு தெளிப்பு ஞானஸ்நானம் அளிக்கின்றனர். அவை பரலோகம் போகாதென்று எண்ணுகின்றனர். 8பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட பெற்றோர்களுக்கு ஒரு குழந்தை பிறக்குமானால், நிச்சயமாக, அந்த குழந்தை பரலோகத்திற்கு செல்லும், ஆனால் அது இல்லையெனில், அந்த குழந்தை போகாதென்றும் போதிக்கப்பட்ட ஒரு கோட்பாடானது கூறுகின்றது. அது ஒரு தட்டுதளர்வற்ற தவறாகும். அது பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட பெற்றோர்களாயிருந்தாலும் அது எந்தவித ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணும்? அது எல்லாம் பாலுணர்வு இச்சையேயாகும், குழந்தையும் அந்த விதமாகத் தானே பிறக்கின்றது. எனவே, “எல்லோரும் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டு உலகத்துக்கு பொய் சொல்லுகிறவாகளாய் வருகிறோம்”. இதுதாமே வேதாகம வார்த்தையாயிருக்கிறது. ஆகவே பிறகு இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது அந்த குழந்தையை சுத்திகரித்து, ஒரு பரிகாரத்தைச் செய்கிறது. உலகத்திலே மிகவும் பாவஞ் செய்யும் பெற்றோருக்கு அது பிறந்தாலும் சரி, அது சரியானதை தவறானதை அறிந்து தான் கணக்கொப்புவிக்கும் வயதை அது அடையுமுன் அது மரிக்குமானால், அது பரிபூரணமாக நேரடியாக தேவனுடைய பிரசன்னத்திற்குள் செல்கின்றது. அதற்கு பிறகு அது என்னவெல்லாம் செய்கின்றதோ, அதிலிருந்து, அது அதற்காக மன்னிக்கப்பட வேண்டியதாகயிருக்கின்றது. அதற்கு பிறகு தன்னுடைய சொந்த மனந்திரும்புதலை அது கேட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் அது குழந்தையாக இருக்கையில்... 9இப்பொழுது, நாம் பின்பற்ற முயற்சிக்கும் வழியானது, உலகிலேயே நான் சென்று உபதேசத்தை பிரசங்கிக்கும் ஒரே இடமானது இந்த கூடாரத்தில் தான். இங்கே கூடாரத்தில், ஏனெனில் இது நம்முடைய சபை ஆகும். ஜனங்கள் வரிசைபடுத்தப்பட்டு இருப்பதற்காக நாங்கள் இங்கே உபதேசத்தைப் பிரசங்கிக்கிறோம். மற்ற மனிதர், தங்களுடைய சபைகளில் தான் விசுவாசிப்பது எவையோ அவைகளையெல்லாம் அவர்கள் பிரசங்கிக்கின்றனர். ஆகவே அவர்களும் என்னுடைய சகோதரர்தான், நாங்கள் சிறிது வித்தியாசப்படுவோம், ஆனால் இன்னுமாக நாங்கள் அதே சகோதரர் தான். ஆனால், இங்கே கூடாரத்தில், ஆவிக்குரிய போதகம் என்று நாங்கள் நினைப்பதை நாங்கள் பிரசங்கிக்கிறோம். மேலே, அங்கே, பிள்ளைகளில் பிரதிஷ்டைக்காக பார்த்துக் கொண்டிருக்கிறோம், பிரதிஷ்டை என்று நாங்கள் அழைக்கிறோம், வேதத்தில் காணப்படுகின்ற ஒரேயொரு இடம், அல்லது புதிய ஏற்பாட்டில் சிறு பிள்ளைகளைப் பற்றி கூறப்படுகின்ற இடம், அல்லது ஒரு சமயச் செயலாக கிறிஸ்து ஈடுப்பட்ட ஒன்றானது, அவர் அவைகளை தம்முடைய கரங்களில் அணைத்து அவைகளின் மேல் தம்முடைய கைகளை வைத்து அவைகளை ஆசீர்வதித்து, சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடை பண்ணாதிருங்கள், தேவனுடைய ராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது,'' என்று கூறினார். 10இப்பொழுது, செய்து முடிப்பதற்காக அவர் வந்த அந்த வேலையை தொடர்ந்து நாம் செய்யத் தக்கதாகத் தான் நாம் இங்கே விடப்பட்டுள்ளோம், என்று நாம் பார்க்கிறோம். கல்வாரியில் அவருடைய மரணமானது, அவர் நம்மோடு இருந்தார், பிறகு அவர்... தேவனிலிருந்து வெளி வந்து, உலகத்திற்குள் வந்து, தேவனிடமிருந்து திரும்பச் சென்று, அல்லது உலகத்திலிருந்து தேவனுக்குள் சென்று, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் மறுபடியுமாக வந்தார், நம்மோடு, நமக்குள் இருக்கின்றார், அவர் இங்கே பூமியில் இருந்தபோது அவர் செய்த அதே பணியை தம்முடைய சபையில் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே, அதன்படியே, நாம் ஊழியக்காரரிடம் நம்முடைய பிள்ளைகளை கொண்டு சென்று அவைகளின் மேல் தங்கள் கரங்களை வைத்து தேவனிடம் பிரதிஷ்டை செய்கிறோம். கர்த்தர் நமக்கும் சிறு பிள்ளைகளுக்கும் செய்ததை உணர்ந்து மதிப்பிடுகிறோம் என்று காண்பிக்கத் தக்கதாக இது ஒரு சிறு வைபவம். 11இப்பொழுது, உங்களுடைய சிறு பிள்ளையானது தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டிருக்குமானால், அல்லது உங்கள் சபையில் எந்த விதமாகச் செய்யப்பட்டிருந்தாலும், சிந்தியுங்கள். அதற்கெதிராக ஒன்றையும் நாங்கள் கூறுவதில்லை. அதுசரி. ஆனால், வேதப்பூர்வமாக இயேசு தாமே அவர்களை ஆசீர்வதித்ததை ஒரேயொரு இடத்தில் தான் நாம் காண்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், இங்கே வார்த்தையில் நான் அதை வாசிக்கிறேன். பரிசுத்த லூக்காவில் நாம் காண்கிறோம், அது... 10-ஆம் அதிகாரம் 13-வது வசனம் துவங்கி என்று நான் நம்புகிறேன். அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்: கொண்டு வந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசு அதைக் கண்டு விசனமடைந்து சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளைகளைப் போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்று கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப் பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக் கொண்டு அவர்கள் மேல் கைகளை வைத்து அவர்களை ஆசீர்வதித்தார். அது அருமையானதல்லவா? அவர், ''சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் இந்த சிறு பிள்ளைகளைப் போன்று இருப்பவர்களுடையது'' என்று கூறினார். ஆகவே அவர் அவர்களை தம்முடைய கரங்களில் அணைத்து அவர்களை ஆசீர்வதித்தார். 12இப்பொழுது இக்காலையில் இயேசு இங்கே மானிட ரூபத்தில் பிரசங்க மேடையில் மீது உட்கார்ந்து “கர்த்தாவே, என் பிள்ளையை ஆசீர்வதிப்பீரா?'' என்று கேட்கும்படியாக நாம் இங்கே கொண்டிருப்போமானால் எவ்விதமாக நாம் நேசிப்போம். ஓ, என்ன ஒரு... நம்முடைய மானிட கண்களும் நம்முடைய இருதயங்களும் அதைக் காண ஆவலாக இருக்கின்றனவே. ஆனால் எப்படியாயினும் அவர் இங்கே இருக்கின்றார், ஏனெனில் அதைச் செய்யத் தக்கதாக நமக்கு கட்டளையை அளித்துள்ளார். நாமும் அதைச் செய்கையில், அவரும் அதை அங்கிகரிக்கிறார். அவர் அனுப்பினவர்களைத் தான் நாம் பெற்றுக் கொள்கிறோம், தன்னை அனுப்பின அவரை பெற்றுக் கொள்கிறோம், நீங்கள் பாருங்கள். ஆகவே, இக்காலையில் அவர் இங்கே இருக்கின்றார். நீண்ட காலமாக நாம் பாடுகின்ற, 'அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள்' என்கிற நம்முடைய பழைய பாடலை சகோதரி கெர்ட்டி வந்து பியானோவில் வாசிப்பாரானால் - அந்தப் பாடல் இங்கே புத்தகத்தில் எங்கோ இருக்கிறதென்று நான் நம்புகிறேன். அது எனக்குத் தெரியவில்லை, ”சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். ஆகவே நீங்கள் ஒரு குழந்தையை, பிரதிஷ்டை செய்யக் கூடாதிருக்கிற ஒரு சிறு குழந்தையை நீங்கள் கொண்டிருந்து இக்காலையில் அதை பிரதிஷ்டை செய்ய நீங்கள் விரும்பினால், என்ன, அதைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். 13நாங்கள் இந்த பிள்ளைகளை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்யும் போது நீங்கள் வந்து எங்களோடு நிற்க விரும்பும் ஊழியக்காரர்கள், பிரசங்கிகள் யாராவது கட்டிடத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் வருகையில் நீங்கள் எங்களோடு இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்ளுவோம். சரி, அது புத்தகத்தில் இருக்கின்றதா? சகோதரன் நெவில், நீங்கள் அதை கண்டு பிடித்தீர்களா? அது இல்லையா. சரி, எத்தனை பேருக்கு அது தெரியும், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்? சரி, தாய்மார்கள் எல்லாரும் ஒன்றாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வருகையில் சரி, சரி இப்பொழுது அதைப் பாடுவோம். அவர்களை உள்ளே, அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவத்தின் இடங்களிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் திரிந்து கொண்டிருப்பவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவத்தின் இடங்களிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். 14சற்று நமது தலைகளை வணங்கலாமா. எங்களுடைய பரலோகப் பிதாவே, இக்காலை பீடத்தைச் சுற்றி நின்று கொண்டிருக்கிறோம். தாய் தந்தையர், நீர் கிருபையாய் அவர்களுக்கு அளித்த தங்களுடைய சந்ததியினரை கையில் பிடித்தவாரே நின்று கொண்டிருக்கின்றனர். கர்த்தாவே, இவர்களுக்காக அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக உள்ளனர், அவர்கள் இவர்களை இக்காலையில் உமக்கு பிரதிஷ்டை செய்யவும் இவர்களுடைய ஜீவன்களை உம்மிடம் அளிக்கவும், தேவனுடைய வீட்டில் பீடத்தண்டை கொண்டு வருகின்றனர். நீர் அளித்திருக்கிறீர். தேவனே, நீர் தாமே இவர்கள் ஒவ்வொருவரையும் போஷித்து ஆசீர்வதிக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். இவர்களை வழி நடத்திச் செல்லும், கர்த்தருடைய பாதுகாக்கும் தூதர்கள் தாமே அவர்கள் ஒவ்வொரு வரையும் கண்காணிப்பார்களாக. மகிழ்ச்சியும் சந்தோஷமும் மிக்க நீடிய வாழ்வை அவர்களுக்கு அளியும். இவர்கள் தாமே நாளை என்ற ஒன்று இருக்குமானால், நாளைய மனிதரும் ஸ்திரீயுமாக இவர்கள் எழும்புவார்களாக, 15தேவனே, இக்காலை பீடத்தைச் சுற்றி இருக்கின்ற இந்த குழந்தைகளின் குழுவிலிருந்து பிரசங்கிகளையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் நீர் தாமே எழுப்பத் தக்கதாக நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் வயதாக இன்னும் செல்ல முடியாதவர்களாக இருக்கையில், ஒவ்வொரு இடத்திற்கும் யாராவது எங்களை கூட்டிச் செல்ல வேண்டியதாக இருக்கும், நாங்கள் தாமே நின்று இன்று இங்கேயிருக்கின்ற இவைகள் தாமே பிரசங்கிக்கின்ற சுவிசேஷத்தை நாங்கள் கேட்போமாக. இதை அருளும் கர்த்தாவே. என்றாவது மகிமையான ஒரே நாளிலே எல்லாம் முடிந்துவிட்டிருக்கையில், எங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டிருக்கையில், பீடத்தை சுற்றியிருக்கின்ற இந்த பெற்றோர், வயதான யாக்கோபு தன்னுடைய எல்லா பிள்ளைகளையும் ஆசீர்வதித்து கடைசி நாட்களில் அவர்களுடைய முடிவு என்னவாயிருக்கும் என்று அவர்களுக்கு கூறினது போல நாங்கள் இருப்போமாக. பிறகு மேலே நோக்கிப் பார்த்து, ''உனக்குத் தெரியுமா, நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப் போகிறேன்'' என்று கூறினான். பிறகு மகிமையான ஒரு நாளிலே, அவனும் அவனுடைய சந்ததியார் எல்லாரும், ஒரு மேம்பட்ட தேசத்தில் ஒன்று சேர்க்கப்படவிருக்கிறார்கள். பிலேயாம், ''என் முடிவு அவன் முடிவு போல் இருப்பதாக“ என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. ஆகவே இப்பொழுது இவர்கள் மீது நாங்கள் கைகளை வைக்கையில், என்ன - என்ன ஒரு அற்புதமான... இதை எவ்வளவு தாழ்மையான ஒன்றாகச் செய்துவிட்டீர், கர்த்தாவே, இந்த பூமியின் மனிதராகிய நாங்கள் உம்முடைய நாமத்தில் சிறு பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் சிலாக்கியத்தை கொண்டிருப்போம், இதை அறிந்து, அதை நாங்கள் எதைக் கேட்கிறோமோ, எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் ஆசீர்வதிக்கச் செல்கையில், ஒவ்வொரு பிள்ளையின் மேலும் நாங்கள் கைகளை வைத்து இவர்களை அவருக்கு அளிக்கையில், இயேசு தாமே எல்லாராலும் காணப்பட முடியாத சர்வ வல்லமையுள்ளவர் தாமே அருகில் நின்று ஆசீர்வதிப்பாராக. அவருடைய நாமத்திலே இதை நாங்கள் கேட்கிறோம். ஆமென். 16(ஒலிநாடாவில் காலியிடம் - சகோதரன் பிரன்ஹாம் குழந்தைகளை பிரதிஷ்டை செய்கின்றார் - ஆசி) நீ ஒரு - ஒரு சிறிய, பழைய மறைவை வைத்திருந்தாய், அங்கே நார்த்லாண்டில், நீர் இந்த பிள்ளையை எனக்கு தருவதாக வாக்களித்திருந்தீர். பிதாவே, உம்முடைய ஆசீர்வாதங்கள் தாமே இவன் மீது தங்குவதாக. ஜோசப், என் மகனே, நான் உன்னை தேவனிடம் அளிக்கின்றேன். உன்னுடைய வாழ்க்கை ஒரு ஆசீர்வாதமாக இருப்பதாக. தேவனுடைய கிருபை தாமே உன் மீது தங்குவதாக. உன்னுடைய தந்தையின் தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே உன்னை ஆசீர்வதித்து, உன்னுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி செய்வாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவனை நான் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம். சகோதரன் பிரன்ஹாம் குழந்தைகளை பிரதிஷ்டை செய்கிறார் - ஆசி) சிறு பிள்ளைகளை நேசிக்கிறீர்களா? ஒவ்வொரு தாயும் தன் பிள்ளை ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்ற இந்த சிறு பையன்களைக் குறித்து ஏதோ ஒன்று உள்ளது. இப்பொழுது, இக்காலையில் பெரியவர்களாகிய நமக்கும் அந்த விதமாகத் தான் நம்முடைய பரலோகப் பிதாவும் இருக்கிறார். நாம் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு முன்பு நமக்கு ஒன்றை அளிக்கின்றார், அதை நம் கைக்கு அளித்து, “இதோ, நீ ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என் பிள்ளையே” என்று கூறுகிறார். அவர் அற்புதமானவரல்லவா? அந்த விதமான ஒரு அன்பான பரலோகப் பிதாவை நம்மால் உணர முடிகின்றது. 17இப்பொழுது, சிறு குழந்தைகளின் ஆசீர்வாதங்களில், உங்களுக்குத் தெரியுமா, முன்பொரு நாளில் அதை நான் அது பழைய ஏற்பாட்டில், இங்கே ஓரிடத்தில், அந்த ஒரு - ஒரு மகத்தான காரியமான அதை நான் - நான் உணர்ந்து வாசித்தேன். இதோ அது, சரியாக இங்கே, “நாத்தான்வேல் தாவீதை நோக்கி நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும். கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே'', என்றான். பாருங்கள்? உங்களுடைய இருதயத்தில் என்ன இருக்கின்றதோ அதைச் செய்யுங்கள். அநேக சமயங்களில் நான் - நான் இதைக் கண்டிருக்கிறேன், கிறிஸ்தவ நண்பனே என்ன கூறப் போகின்றேன் என்பதை அறியாமலே நான் காரியங்களை உரைத்திருக்கிறேன், பிறகு அது நிறைவேறுவதையும் நான் கண்டிருக்கிறேன். நீங்கள் என்ன கூறுகின்றீர்களோ அது! 18ஒரு காலத்தில் கூறப்பட்டது, இயேசு மலையலிருந்து கீழே இறங்கி வருகையில் ஒன்றுமே இல்லாத ஒரு அத்திமரத்தை அவர் கண்டார், அதில் இலைகள் மாத்திரமே இருந்தது, அதில் கனிகள் காணப்படவில்லை, அப்பொழுது அவர், ''இது முதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக் கடவன்'' என்றார். ஆகவே அடுத்த நாளில், அப்போஸ்தலர்கள் அதைக் கடந்து சென்ற போது இலைகள் வாடியிருந்ததையும் கண்டனர். அவன், “இதோ எவ்வளவு சீக்கிரமாக இந்த மரம் பட்டுப்போயிற்று” என்றான். இயேசு, “தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள், ஏனெனில் நீங்கள் ஜெபம் பண்ணும் போது எந்த காரியத்தை கேட்டுக் கொள்வீர்களோ அதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அது உங்களுக்கு உண்டாகும். நீங்கள் எவைகளையெல்லாம் கூறுகிறீர்களோ, நீங்கள் எதைக் கூறினீர்களோ அது உங்களுக்கு உண்டாகும்'' என்று இயேசு கூறினார். அதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஓ, ஒருக்கால் இன்றைக்கு, தேவனுடைய அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர், இங்கே பீடத்தண்டை நின்று கொண்டிருக்கையில், நீங்கள் கூறுகிறீர்கள், ”நல்லது, அது அலங்கரிக்கப்பட வேண்டியதில்லை. அது ஒரு மகத்தான நுட்பமாய்ச் செய்யப் பெற்ற இடமாக இருக்க வேண்டிய அவசியமில்லை“. 19ஒரு காலத்தில் யாக்கோபு ஒரு கல்லை இழுத்து அதன் மீது தன் தலையை வைத்தான், அது இன்னுமாக இன்றைக்கு ஒரு stone of Scone என்று அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறது. அல்லது, பூமியின் மகத்தான மனிதரெல்லாம் இன்னுமாக அந்த கல்லைச் சுற்றிலும் வருகின்றனர், ஏனெனில் இந்த கல்லின் மேல் ராஜாக்கள் பதவி ஆரம்பிக்கத் தக்கதாக, அங்கே அந்த சாதாரண பழைய கல், இருந்து கொண்டிருக்கின்றது. பெத்தேல், கற்கள் ஒன்றின் மேல் ஒன்று குவிக்கப்பட்ட இடம் ஆகும், அது தேவனுடைய வீடாகவும் வாசஸ்தலமாகவும் ஆனது. யாகோபு, “இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல'' என்றான். ஒன்றோடொன்று குவிக்கப்பட்டிருந்த கற்களாகும். அது மகத்தான நுட்பமான காரியங்களைக் கொண்டு இருக்கின்ற ஒன்றல்ல. விசுவாசிக்கும்படியாக விசுவாசத்தையும் எளிமையும் கொண்டிருப்பதுதான் காரியம் ஆகும். அது தான் அதை உருவாக்குகின்றது. 20இப்பொழுது, நேரமானது சீக்கரமாக கடந்து செல்கின்றது என்று அறிந்தவர்களாக, நீண்ட நேரம் உங்களை பிடித்து வைக்காமலிருக்க முயற்சி செய்வோம், உஷ்ணமாயும் சபை கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம். இக்காலை ஒரு சிறிய பொருளின் பேரில் சற்று நான் உங்களிடம் பேசப் போகிறேன், அதினால்... அது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆகவே இப்பொழுது நான் வீட்டிற்கு புறப்படு முன்னர், மூன்று அல்லது நான்கு சிறு காரியங்களை நான் குறித்து வைத்துள்ளேன். நான், ''நான் அங்கே செல்கையில் நான் என்ன பேச வேண்டும் என்று கர்த்தர் விரும்புகின்றார் என்று நான் காத்திருந்து பார்க்கப் போகிறேன் என்றேன். ஆறு சிறு காரியங்களை, சிறு பொருள்களை நான் எழுதி வைத்துக் கொண்டேன், மேலும் ஒன்றை நான் எழுதி, அதை என்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். நான், “நல்லது, ஒருக்கால் நான் பிரசங்க பீடத்திற்கு செல்லும் போது பேசும்படியாக ஏதாவதொன்றை அவர் என்னிடம் கூறுவார்'' என்று எண்ணினேன். இப்பொழுது நான் அங்கிருந்ததை விட இன்னும் சற்று கடந்து வந்துள்ளேன். ஆகவே எப்படியாயினும், இங்கே ஒரு வேத வசனத்தை நான் வாசிக்கப் போகிறேன், அதை நாம் புரிந்து கொள்ள கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. பரிசுத்த லூக்கா 14-ம் அதிகாரம், நாம் வாசிக்க ஆரம்பிப்போம். 31-ஆம் வசனம் பரிசுத்த லூக்கா 14-ஆம் அதிகாரம். அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ் செய்யப் போகிற போது தன் மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக் கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைப் பண்ணாமலிருப்பானோ? கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும் போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக் கொள்வானே. அப்படியே உங்களில் எவனாகிலும் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, முதலாவதாக அவர் கூறினார்... அது ஒரு உவமையாகும். அவர் கூறினார், இப்பொழுது, ஒரு ராஜா வருகிறான், அவனுக்கு இருபதாயிரம் போர் வீரர்கள் இருக்கின்றனர்; மேலும் இந்த ராஜா அவனை சந்திக்கப் போகிறான், இவனுக்கு பத்தாயிரம் போர் வீரர்கள் மாத்திரமேயுள்ளனர். ஆகவே அப்படியானால், முன்னதாக அவன் உட்கார்ந்து தயாராக இருக்கின்றானா, அவனால் செய்ய முடியுமா செய்ய முடியாதா என்று அவன் கேட்கின்றான். சரி... உங்களில் ஒருவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான் (பாருங்கள்?) இப்பொழுது கர்த்தர் தாமே இந்த வார்த்தையோடு தம்முடைய ஆசீர்வாத்தைக் கூட்டுவாராக. இப்பொழுது சற்று நேரம் நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோமாக. 21எங்களுடைய பரலோகப் பிதாவே, எல்லா காரியங்களையும் அறிந்துள்ள நீர், மனிதன் எப்படியிருக்கின்றான் என்பதை பொருட்படுத்தாதவர், ஏனெனில் நீர் அவனைக் குறித்து சிந்தனையுடைவராக இருப்பதற்கு அவன் எம்மாத்திரம்? நீர் மனிதனை உண்டாக்கினீர், அவன் காட்டுப் புஷ்ப்பத்தைப் போல இருக்கிறான், இன்று அவன் அழகாக இருக்கிறான், நாளை அவன் வெட்டப்பட்டு அடுப்பில் போடப்படுகிறான், அவன் உருகி மறைந்து போகிறான். ஆகவே தேவனே இன்று எங்களிடம் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன், நாங்கள் ஒவ்வொருவரும் இன்றைக்கு என்னென்ன செய்தோம் என்கின்ற பட்டியலை எடுக்கட்டும். நாங்கள் திருத்துதலின் வீட்டில் இங்கே இருக்கின்றோம். நாங்கள் கற்றுக் கொள்ளத் தக்கதாகவும், எப்படி ஜீவிக்க வேண்டுமென்பதை அறிந்து கொள்ளவும் இங்கே இருக்கின்றோம், அது தாமே இன்று உம்முடைய வார்த்தையிலிருந்து புறப்பட்டு வருவதாக, ஓ, நித்திய தேவனே. உம்முடைய பிள்ளைகளில் அநேகர் இங்கு கூடியிருக்கின்றனர், அவர்களில் அநேகர் அநேக வருடங்களாக உம்முடைய பிள்ளைகளாக இருக்கின்றனர், ஆனால், அந்த படியே, நாங்கள் எல்லாரும் கற்றுக் கொள்ளவும், அறிந்து தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். சுவிசேஷத்தினுடைய ஊக்குவித்தலை எங்களெல்லார் மேலும், உம்முடைய ஊழியக்காரனின் மீதும் நீர் கொண்டு வர வேண்டுமென்றும், மேலும் உம்முடைய பிரசன்னமானது எங்களை ஊக்குவித்து இந்த கட்டிடத்தில் இன்று மிக மகத்தானதாக இருக்க வேண்டுமென்றும், எங்களுடைய இருதயத்தில், உம்முடைய சிறந்த ஊழியக்காரர்களாக இருக்க விரும்புகிறவர்களாக நாங்கள் செல்வோமாக, இங்கிருப்பதில் அது மிகவும் பலனுள்ளதாக எங்களுக்கு இருக்க வேண்டுமென்றும் நான் ஜெபிக்கிறேன். ஓ, இரக்கமுள்ள தேவனே, இந்த ஆசீர்வாதங்களை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் அருளும், ஆமென். 22இப்பொழுது நாம் வாசிக்கையில் கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களை வார்த்தையுடன் கூட்டுவாராக. இக்காலை “மயக்கியிழுக்கும் ஆவிகளா? (Enticing Spirits) அல்லது தேவனுடைய வார்த்தையா?” என்னும் தலைப்பை எடுக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது, இது ஒரு விநோதமான பொருளாக இருக்கிறது, ஆனால் அது கூடாரத்தில்... கடந்த புதன் இரவில்... கடந்த ஞாயிறு இரவில் நான் ஒரு - ஒரு சிறு சுவிசேஷ யூபிலியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். கடந்த புதன் இரவன்று, தன்னுடைய தலையின் மேல் பலகையை வைத்திருந்த ஒரு ஸ்திரீயைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அல்லது அந்த... தன்னுடைய காசுகளில் ஒன்றை அவள் தொலைத்துவிட்டாள், அவள் தன் புருஷன் வரும் முன்னர் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். ஆகவே நாம் காண்பதென்னவெனில் அவள் கிழக்கத்திய ஸ்தீரீயாக இருந்தாள், ஆகவே அவள்... சபைக்கு பிரதிநிதித்துவமாக இருந்தாள். திருமண அடையாளச் சின்னமானது விரலில் போடுவது வழக்கமாக இருக்கவில்லை. ஒன்பது வெள்ளிக் காசுகளை கொண்டதாய் அது தலையில் அணியப்பட்டிருந்தது. ஒரு ஸ்திரீ விபச்சாரியான போது, அவர்கள் ஒரு வெள்ளிக் காசை வெளியே எடுத்துப் போட்டு அவள் ஒரு விபச்சாரி என்று காண்பித்தனர். ஆகவே இந்த ஸ்திரீ காசுகளில் ஒன்றைத் தொலைத்துவிட்டிருந்தாள், ஒரு விபச்சாரியல்ல. ஆனால் அவளுடைய புருஷன் வெளியே சென்றிருந்தான், ஆகவே அவள் அந்த காசை அவளுடைய பலகையில் திரும்பவுமாக பொருத்த அதை அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தாள், ஏனெனில் அவள் புருஷன் திரும்பி வந்தால் அவள் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்டிருக்கிறாள் என்று தீர்மானம் செய்து கொள்வான், அப்படியானால் வீடு மற்றும் எல்லாம் கூறு கூறாகிவிடும். அதை நான் சற்று நேரம் சபைக்கு பொருத்திப் பார்த்தேன், அநேக மகத்தான் காரியங்கள் இழக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பிதாவானவர் வர நேரமாயிருக்கின்றது, ஆகவே நாம் அவர்களை வேட்டையாட வேண்டியவர்களாக இருக்கிறோம். 23இப்பொழுது, சபையிலும், நம்முடைய கூடாரத்திலும்... ஆகவே கெட்ட வழியில் இழுத்துச் செல்லும் மயக்கியிழுக்கும் ஆவிகள் என்பதன் பேரில் நான் பேச விரும்புகிறேன், அது சரியாக பிசாசியல் என்று தலைப்பில் இருக்கின்றது. இந்நாட்களில் பிசாசுகளைப் பற்றி அதிகமாக நீங்கள் கேள்விப்படுகிறீர்கள், ஆனால் அதை எப்படி துரத்த வேண்டுமென்பதை மிகச் சிறிய அளவில் தான் கேள்விப்படுகிறீர்கள். பிசாசுகள் இருக்கின்றன என்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும், ஆனால் அடுத்த காரியமானது, அதை எப்படி துரத்துவது என்பதே. ஆகவே இப்பொழுது அங்கே... தேவனுடைய கிருபையினால் பிசாசுகள் என்று அழைக்கப்படும் இக்காரியங்களுடன் தொடர்பு கொள்கின்ற அதிக தருணம் கொண்டவனாய், பிரசங்க மேடையிலும் அனுதின வாழ்க்கையிலும் அவைகளை சந்திக்கிறவனாக, என்ன, இக்காலையில் வேதத்திற்குள் நோக்கிப் பார்த்து அந்த காரியங்கள் என்னவென்பதை காண நான் விரும்புகிறேன். 24இப்பொழுது, நாம் அதை ஒரு சுகமளிக்கும் ஆராதனையில் பொருத்தியுள்ளோம். எப்பொழுதுமே சுகமாக்குதலின் பாகத்துடன். புற்று நோய், கட்டி, சதை வளர்ச்சி, காச நோய் மற்ற எல்லா காரியங்களும் இயற்கையான காரியங்கள் அல்ல, அவை இயற்கைக்கு மேம்பட்டவை மற்றும் பிசாசுகள் ஆகும். வேதாகமம் அதை தெளிவாக உறுதிபடுத்துகின்றது. ஆனால் அது சரீரத்தில் இருக்கின்ற பிசாசுகள் தான், சதை வளர்ச்சிகள், புற்று நோய் போன்றது, அதற்குள் ஜீவன் இருக்கின்றது, அந்த ஜீவனானது பிசாசினுடையதாக இருக்கின்றது. கண் சதை வளர்ச்சி, காச நோய் பரவுதல், மற்றும் மற்ற வியாதிகள், அவை பிசாசுகளாகும். அது சரீரப் பிரகாரமாக இருக்கின்ற ஒன்று. இப்பொழுது, இக்காலை நாம் ஆத்துமாவில் ஆவிக்குரிய ரூபத்தில் இருக்கின்ற பிசாசுகளைக் குறித்து நாம் பேசப் போகிறோம். அவைகள் சரீரத்தில் இருக்கின்றதைப் போலவே அதே விதமாக அவைகள் ஆத்துமாவில் இருக்கின்றன. அவை மக்களின் சரீரத்தில், புற்று நோய்களாக மற்றும் மானிட உடலில் இருக்கின்ற பலவித வியாதிகளாக நாம் காண்கையில் நாம் அதை ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். சமீபத்தில், புற்று நோயும் கூட நான்காம் பரிமாண நோய் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது, அது வேறொரு பரிமாணமாகும். நிச்சயமாக, அது பிசாசு செயல்படுகின்ற பிசாசியலாகும். ஒவ்வொரு வியாதியும் நான்காம் - பரிமாண வியாதியாகும், அது துவக்கமும் கூட. 25இப்பொழுது, ஆனால் இப்பொழுது சரீரத்தில் புற்று நோய் அல்லது ஆத்துமாவில் புற்றுநோய் என்பது, அந்த பிசாசினால் எந்த ஒரு இடத்திலும் வர முடியும். இப்பொழுது, அங்கே அநேக சமயங்களில் அநேக மக்கள் நல்ல எண்ணங்களுடன் அந்த நல்ல மக்கள் தாங்கள் கொண்டிருக்கின்ற ஏதோ ஒரு சிறு வேத கலாசாலை அறிவின் பேரில் அல்லது சிறு பிராயம் முதற்கொண்டு தங்களுக்கு கற்பிக்கப்பட்ட ஏதோ ஒன்றின் பேரில் சார்ந்து கொள்ள அநேக தடவை முயற்சி செய்கின்றனர். இன்னுமாக சரியாக தங்களுக்குள், தங்கள் ஆத்துமாவிற்குள் இன்னுமாக சரியாக இல்லாதிருக்கின்ற ஏதோ ஒன்றை அவர்கள் கொண்டிருப்பதை அவர்கள் உணர்கின்றனர். நீங்கள், இக்காலை அநேகர் இங்கே இருக்கின்றீர்கள்... எங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியுள்ளனரோ, அவர்கள் மத்தியில் அந்த ஆவிகளைக் கொண்ட மக்கள் இருப்பதை எந்தவித சந்தேகத்திற்கிடமின்றி நீங்கள் காணலாம், அவர்கள்... அது விரும்பத் தகாததாயிருக்கிற ஒன்று. அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்கள், “ஓ, நான் மாத்திரம் பொய் பேசுவதை விட்டு விடுவேனானால் நான் இச்சிப்பதை விட்டுவிடுவேனானால் நான் இதை அல்லது அதை விட்டுவிடுவேனானால்!'' என்று கூறுவர். இப்பொழுது, அது பிசாசுகள் ஆகும். ஆகவே, இப்பொழுது அநேக முறை அவைகள் மத சம்பந்தமான வடிவில் வருகின்றன. (இது ஒரு ஞாயிறு கூட்டமாயிருப்பதால், இது போதிக்கின்ற நேரமாக இருக்கின்றது. ஆகவே இதை நாம் பார்ப்போமாக) இப்பொழுது, அவை அநேக முறை மத சம்பந்த வடிவில் வருகின்றன. 26இப்பொழுது, வேதாகமத்தில், ஒரு காலத்தில், யோசபாத் என்னும் பெயரைக் கொண்ட ஒரு பக்தியான, ஒரு மகத்தான மனிதன் ஒருவன் இருந்தான். இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த மற்றொரு ராஜாவிடம் அவன் சென்றான். அவன், யூதாவின் ராஜாவாக இருந்தான். ஆகவே அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் சென்றான், அவர்கள் ஒருவருக்கொருவர் பிணைத்துக் கொண்டு, கிலேயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம் பண்ணத் தக்கதாக ஒருவரோடொருவர் கூட்டணி அமைத்துக் கொண்டனர். அவர்கள் முதலாவதாக ஜெபிக்காமல் அதைச் செய்தனர். ஓ, ஜனங்கள் தாமே அதை உணர்ந்து கொள்வார்களானால்! அதன் காரணமாகத் தான் இக்காலை நான் வந்தவுடன், நான் வெளிநாடு செல்கையில் நீங்கள் என்னை நினைவு கூற வேண்டுமென்று நான் உங்களைக் கேட்டுக் கொண்டேன். எல்லா காரியங்களிலும் ஜெபம் செய்யுங்கள். அன்றொரு நாள் யாரோ ஒருவர் வந்து ''சகோதரன் பிரன்ஹாம், இந்த குறிப்பிட்ட காரியத்தைச் செய்வது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?“ என்றார். நான், ''அதைக் குறித்து நீங்கள் ஏன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்றேன். பாருங்கள்? உன்னுடைய மனதில் ஒரு கேள்வி இருக்குமானால், அதை அப்படியே விட்டு விடு, அதைக் குறித்து ஒன்றுமே செய்யாதே. அதோடு அப்படியே தரித்து நில். ஏதாவதொன்றை நீ செய்ய ஆரம்பித்தால், அது சரியானதா, தவறானதா என்ற ஒரு கேள்வி இருக்குமானால் அதைவிட்டு விலகியிரு. அதற்குள் செல்ல மாத்திரம் செய்யாதே, பிறகு நீ சரியாக இருக்கின்றாய் என்பதை அறிந்து கொள்வாய். இப்பொழுது, எல்லா காரியங்களும் முதலாவதாக ஜெபத்தினாலே மாத்திரம் கட்டாயமாக செய்யப்பட வேண்டும். ''முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது மற்றவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்'', மனிதரும் ஸ்திரீகளும் தங்கள் ஆத்துமா, தங்கள் சிந்தனை, தங்கள் நடக்கை யாவும் தேவனுடைய பார்வையில் பரிபூரணமாக இருக்கும்படியான ஒரு ஸ்தானத்திற்குள் செல்வார்களானால், அது இதுவரை இருந்த சபைகளிலேயே மிக வல்லமையானதாக இருக்கும். 27சரீரப் பிரகாரமாக சற்று கவனித்துப் பாருங்கள். இப்பொழுது, நாம், அநேக தடவை, அநேக வருடங்களாக தானியங்கித் தசைகளின் அசைவால் பொய் பேசுவதைக் கண்டு பிடிக்கும் ஆற்றலுடைய பொறிக் கருவியான “பொய் பேசுவதைக் கண்டு பிடிக்கும் கருவி” என்றழைக்கப்படும் கருவியை நாம் கொண்டிருக்கிறோம். அதை நீங்கள் உங்களுடைய கை மணிக்கட்டில் வைத்து அவர்களுடைய - அவர்களுடைய தலையைச் சுற்றிக் கட்டினால் ஒரு பொய்யை எவ்வளவாக முயற்சி செய்து அதை ஒரு உண்மையைப் போல் பேசினாலும், அந்த கருவி ஒவ்வொரு தடவையும் பொய் கூறப்படுகிறது என்று காண்பிக்கும், ஏனெனில் பொய் பேசும் விதத்தில் மானிடன் உண்டாக்கப்படவில்லை. பொய் பேசுவதென்பது இரண்டாம் வஞ்சகம் செய்வதாகும், நேர்மையின்றி தீமை விளைவிக்கின்ற காரியமாகும், தீய காரியமாகும். எந்த ஒரு நாளும் நான் என்னுடன் ஒரு பொய் சொல்பவனைக் காட்டிலும் ஒரு குடிகாரனையே நான் கொண்டிருப்பேன். பாருங்கள்? பொய் சொல்பவன் ஆகவே நீங்கள் பொய் சொல்லும் விதத்தில் உங்கள் சரீரமானது உண்டாக்கப்படவில்லை. எவ்வளவாக பாவமுள்ளவனாக இருந்தாலும் சரி, நீங்கள் இன்னுமாக விழுந்து போன தேவனுடைய குமாரனாக இருக்கின்றாய். இன்று நகரத்தில் இருப்பதிலேயே மிகவும் பாவமுள்ள நபராக இருந்தபோதிலும், நீ பாவமுள்ளவனாக இருக்க வேண்டுமென்று தேவன் எண்ணங் கொள்ளவில்லை. தம்முடைய குமாரன் அல்லது குமாரத்தியாக நீங்கள் இருக்க வேண்டுமென்றே அவர் விரும்பினார். அவருடைய சொந்த சாயலின்படியே நீங்கள் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் பாவம் நீ அதைச் செய்யும்படியாக ஆக்கிற்று. நீ எவ்வளவுதான் போலியாக்கிக் காண்பிக்க முயற்சித்து, ஒரு பொய்யை சரியான ஒன்றைபோல காணப்பட முயற்சித்தாலும், அது தவறாகவுள்ளது என்று நிரூபிக்கும் ஒரு விஞ்ஞான கருவியை அவர்கள் வைத்திருக்கின்றனர். நீ எல்லா அப்பாவித்தனத்தோடும் அதை கூற முயற்சிக்கலாம், ஆனால் அது இன்னுமாக கூறப்படுவது பொய் என்று காண்பிக்கும். 28ஆதலால், ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ தங்கள் சிந்தைகளை, தங்கள் சாட்சியை தாங்கள் ஓவியங்களை தேவனோடு நேர்முகப்படுத்தி (ஆமென்) பரிசுத்த ஆவியின் வாய்க்காலால் பரிபூரணமாக தேவனோடு ஒன்றாகுமானால், சம்பவிப்பது என்னவாயிருக்கும் மனிதனும் ஸ்திரீயும் தங்கள் இருயத்தில் சுதந்தரத்துடனும், உள்ளாழத்திலிருந்து வருகின்ற விசுவாசத்துடனும், நேர்முகப்படுத்துவார்களானால் சம்பவிப்பது என்னவாயிருக்கும்! அநேக மக்கள் ஜெபிக்கப்படத் தக்கதாக பீடத்தண்டை வருகின்றனர், அவர்கள் அறிவுப்பிரகாரமான விசுவாசத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்து அறிவுப்பிரகாரமான விசுவாசத்தினால் ஒரு சபையை சேர்ந்துவிடுகின்றனர். அவர்கள் அதை தங்கள் - தங்கள் மனதில் விசுவாசிக்கின்றனர். அவர்கள் அதைக் கேட்டதினால் அதை விசுவாசிக்கின்றனர். அது தான் சிறந்த ஒரு நடத்தைப் போக்கு என்று அவர்கள்அறிந்திருப்பதினால் அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். ஆனால் தேவன் அதை நோக்கிப் பார்ப்பதில்லை. உங்களுடைய அறிவுப்பிரகாரமான விசுவாசத்தை அவர் பார்ப்பதில்லை. அவர் இருதயத்தை நோக்கிப் பார்க்கின்றார், அதில் தேவன்... அது இருதயத்திலிருந்து வருமானால், அப்பொழுது எல்லா காரியங்களும் கைகூடும். உங்களுடைய அறிக்கையானது உங்களுடைய ஜீவியத்துடன் ஒன்றாகும். உங்களுடைய அறிக்கை செய்வது போல உங்களுடைய ஜீவியம் சத்தமாக பேசுகின்றது. உங்களுடைய அறிக்கையானது ஒன்றைக் கூறி உங்களுடைய ஜீவியமானது வேறொன்றை வாழுமானால், அப்படியானால் எங்கோ தவறு உள்ளது. ஏனென்றால் நீங்கள் அறிவுப்பிரகாரமான விசுவாசத்தை கொண்டுள்ளதால், அது உங்களுடைய இருதயத்திலிருந்து வரும் விசுவாசம் அல்ல. ஆகவே அது அந்த வெளிப்புறத்தைக் காண்பிக்கும், இங்கே தேவனுடைய ஞானம்; ஆனால் உட்புறத்தில் இங்கே ஒரு பிசாசானது, “தெய்வீக சுகமளித்தலில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன், ஆனால் அது எனக்கல்ல'' என்று சந்தேகித்துக் கொண்டிருக்கிறது. பாருங்கள்? ”ஆ, அவ்விதமாகத் தான் இருக்கும், ஆனால் அதை நான் விசுவாசிக்க மாட்டேன்'', புரிகின்றதா? வெளிப்புறமாக, நீங்கள், “ஆமாம்'' என்பீர்கள்; உள்ளாக உங்களுடைய மனச்சாட்சியானது ''இல்லை'' என்று கூறுகின்றது. அந்த அதே விஞ்ஞானக் காரியமானது அது தான் சரி என்று நிரூபிக்கும், அதை நிரூபிக்கும். 29இப்பொழுது இந்த ராஜாக்கள், அவர்கள் புறப்படு முன்னர், அவர்கள்... யோசபாத் ஆகாபோடு ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் முன்னர், அவன், “நாம் ஜெபித்து கர்த்தருடைய சித்தம் என்னவென்பதைப் பார்ப்போம்” என்று அவன் கட்டாயமாகக் கூறியிருக்க வேண்டும். எல்லா காரியத்திலும் தேவனை முன் வைக்கும் ஒரு பிரசங்கியை எனக்குத் தாருங்கள், ஒரு கிறிஸ்தவனை எனக்குத் தாருங்கள், கிறிஸ்தவளாயிருக்கின்ற ஒரு குடும்பத் தலைவியை எனக்குத் தாருங்கள், ஒரு விவசாயியை அல்லது ஒரு தொழிற்சாலைத் தொழிலாளியை எனக்குத் தாருங்கள், அவன் மீது பிசாசு எதை வைத்தாலும் வெற்றியடையும் அந்த மனிதனை நான் உங்களுக்கு காண்பிப்பேன். அவன் முதலாவதாக தேவனைத் தேடுகிறான். நாம் முதலாவதாக... அவர்கள் அதைச் செய்யவில்லை. ஆகாப் ஒரு மகத்தான பளபளப்பான ராஜ்ஜியத்தை கொண்டிருந்தான்; மேலும் அவன் நிறைய காரியங்களைச் செய்திருந்ததால், அவன் தன்னுடைய பகட்டான மணி அலங்கார ஒப்பனைகள், பொன், அவனுடைய பொன், அவனுடைய வெள்ளி, மற்றும் ஒரு மகத்தான, வெற்றி வாகை சூடிய மனிதனாகவும் அவன் இருந்ததால், அவர்கள் எல்லாரும் தெளிவில்லாதவர்களாக ஆயினர். இன்னுமாக அவன் ஒரு அவிசுவாசியாக இருந்தான். 30ஆகவே இன்றும் உலகமானது அவ்விதமாகத்தான் இருக்கின்றது. அங்கே தான் அமெரிக்கா நின்று கொண்டிருக்கின்றது. அங்கே தான் இன்று சபைகளும் நின்று கொண்டிருக்கின்றன. கட்டப்பட்ட ஆலயங்களில் மிகச் சிறந்த ஆலயங்களையுடையவர்களாக நாம் இருக்கிறோம். இருப்பதிலேயே சிறந்த மெருகேற்றபட்ட அறிவாளிகளை நாம் கொண்டிருக்கிறோம். சிறந்த வேத சாஸ்திரத்தை, இன்னும் மற்றவைகளை நாம் போதித்திருக்கிறோம், தூதர்களைப் போல பாட நாம் கற்றிருக்கிறோம், ஆனால் இன்னுமாக எங்கோ ஒரு பலவீனம் காணப்படுகின்றது. ஒரு பலவீனம் இருக்கின்றது, ஏனெனில் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு திரும்பி வருவதற்கு பதிலாக மனிதனுடைய போதகங்கள் மற்றும் மயக்கிழுக்கும் ஆவிகளின் பின்பாக சென்றிருக்கின்றனர். உலகத்தின் பாணியிலேயே அவர்கள் காரியங்களைச் செய்ய முயற்சிக்கின்றனர். ஹாலிவுட்டைப் போன்று பளபளக்கும் காரியங்களை அதன் மீது வைக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். 31இங்கே முன்பொரு நாளிலே, ஒரு புகழ்பெற்ற ஸ்தாபனம், கான்சாஸ் நகரத்தில் முழு சுவிசேஷ துறை, அல்லது, என்னை மன்னியுங்கள், டென்வரில், கன்வென்ஷன் கூட்டத்தில், பத்து லட்சம் டாலர் செலவில் ஒரு ஆலயத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுவிசேஷத்தை அஞ்ஞானியிடம் கொண்டு செல்லத் தக்கதாக ஆயிரக்கணக்கான மிஷனரிமார்கள் அந்த அதே ஸ்தாபனத்தில் ஐம்பது சென்டுகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று நமக்கு தேவைப்படுவதென்னவென்றால் மிஷனரி மனப்பாங்குடைய, தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினால் பிறக்கின்ற எழுப்புதல், மற்றும் தேவனுக்கென்று உழைக்க ஆர்வமிக்கவர்களாகவும், பெரிய, அருமையான சபைகளைக் கட்டி அடுத்தவனை மிஞ்ச முயற்சி செய்வதற்கு பதிலாக, காடுகளுக்குள்ளாகச் சென்று தேவனுக்காக ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்றிருக்கிறவர்கள் தான். நான் அசுத்தம் போக்கப்பட்டதாயிருக்கின்ற, ஒரு தெய்வீகக் கட்டளையின் பணியில் அல்லது ஒரு மது அருந்தும் அறையில், பரிசுத்த ஆவியின் விடுதலையோடும், இருதயங்களில் தேவனுடைய அன்பானது எரிந்து கொண்டிருக்கையில் தொழுது கொள்வேனேயன்றி, உலகத்திலே சிறந்த ஒரு மகத்தான மாவட்ட தலைமை கிறிஸ்தவ ஆலயத்தில் உட்கார்ந்து மனிதனுடைய போதகங்களாலும், கோட்பாடுகளாலும் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருக்கமாட்டேன். இன்று நமக்கு தேவைப்படுவதென்னவென்றால் ஒரு கலக்குகின்ற எழுப்புதலாகும், சத்தியத்திற்கு திரும்புங்கள், மறுபடியுமாக தேவனுடைய வார்த்தைக்கு திரும்புங்கள். 32இப்பொழுது அவர்கள் அங்கே சென்ற போது, சிறிது நேரம் கழித்து தான் யோசபாத் நிதானிக்க துவங்கி, “நாம்... நல்லது நாம் இதைக் குறித்து கர்த்தரிடத்தில் விசாரிப்போம்'' என்றான். அதற்கு அவன், ''சரி'' என்றான், ஆகாப் செய்தான், அவன் ஆள் அனுப்பி, நூறு..., நானூறு அருமையாக பயிற்சி பெற்ற பிரசங்கிகளை கொண்டு வரச் செய்தான். அவர்களை அவன் அங்கே கொண்டு வந்து, ''இவர்கள் எல்லோரும் தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள்'' என்றான். அப்பொழுது அவர்கள் தங்களுடைய மாந்திரீக செயலை செய்து கூப்பிட ஆரம்பித்தனர். அவர்கள், “ஆம், நீங்கள் கலக்கமில்லாமல் செல்லலாம். ஆண்டவர் உங்களோடு இருக்கின்றார் என்றனர்”. எவ்வித கலக்கமில்லாமல் செல்லலாம் என்று ஏறக்குறைய நானூறு பேர் சாட்சி கொடுத்த பிறகு, இன்னுமாக யோசபாத்திற்கு... உங்களுக்கு புரிகின்றதா? பாருங்கள், அந்த நீதிமானின் இருதயத்தில் ஏதோ ஒன்று, அங்கே ஊறுகாயில் ஏதோ ஒரு முள் எங்கோ இருக்கின்றது என்று கூறினது. ஏதோ ஒன்று தவறாக இருந்தது. 33ஆகாப், இப்பொழுது இங்கே நம்மிடையே நானூறு பேர் ஒரே மனதுடன், அவர்கள் ஒவ்வொருவரும், “போம், ஆண்டவர் உங்களோடு இருக்கின்றார் என்று கூறுகின்றனரே என்றான்''. ஆனால் யோசபாத், “இன்னும் ஒருவனை நீர் கொண்டிருக்கிறீரா?'' என்றான். அவன், “ஆம், தேசத்தில் மிகச் சிறந்த கல்வியறிவு பெற்ற நானூறு மனிதர் நமக்கிருக்க மேலும் இன்னும் ஒருவன் ஏன் நமக்கு தேவை? அவர்களெல்லாரும் 'போம்' என்கின்றனரே!'' என்றான். அது அறிவுப் பிரகாரமான ஒன்றாகும். ஆனால் யோசபாத்தின் இருதயத்திலோ எங்கோ தவறு காணப்படுகின்றது என்று அறிந்திருந்தான். இப்பொழுது அவன், ”இன்னும் ஒருவன் எங்களிடம் இருக்கின்றான், அவன் தான் மிகாயா. ஆனால் நான் அவனைப் பகைக்கிறேன்'' என்றான். அவன் எப்பொழுதுமே தீமையானதைக் கூறி, அவனுக்கு தேவையில்லாத விஷயத்தில் விரைந்து தலையிட்டு, சபைகளையும் மற்ற எல்லாவற்றையும் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறான் என்றான். நான் அவனைப் பகைக்கிறேன்,'' என்றான். ''அவனை அழைத்து வா, அவன் என்ன கூறுகிறான் என்று நாம் பார்ப்போம்“ என்றான். மிகாயா வந்த போது, அவன் கூறினான்... அவர்கள், ''இப்பொழுது, பார், அவர்கள் கூறின அதே காரியத்தை தான் நீ கூறவேண்டும்'' என்றனர். அவன் கூறினான், அவன் கூறினான், ''நான் மாத்திரம்...'' இதோ அது, ''தேவன் என்ன கூறுகின்றாரோ அதை மாத்திரமே நான் கூறுவேன்,'' ஆமென். “உன் தீர்க்கதரிசி என்ன கூறினாலும் இது என்ன கூறுகின்றதோ, உன்னுடைய சபை என்ன கூறுகின்றதோ, மற்றும் அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. தேவன் என்ன கூறுகின்றாரோ அதையே நான் கூறுவேன். தேவன் என்னுடைய உதடுகளின் மீது வைப்பார், அவர் கூறுவதையே நான் கூறுவேன். தேவன் கூறியதை மாத்திரமே கூறும் மிகாயாக்கள் தான் இன்று நமக்கு தேவைப்படுகின்றனர். 34கவனியுங்கள், ஆகவே அவனை அவர்கள் அங்கே கொண்டு சென்றனர், அவன், “இன்றிரவு அவகாசம் கொடுங்கள்'' என்றான். ஆகவே அந்த இரவில் கர்த்தர் அவனை சந்தித்தார், அடுத்த நாள் காலை அவன் திரும்பி வந்தான், அந்த இரண்டு ராஜாக்களும் ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருந்த போது அவன் 'போம்' என்றான்'', ”போம், ஆனால், இஸ்ரவேல் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன்,'' என்றான். ஆகவே நன்றாக உடையுடுத்தியிருந்த இந்த பிரசங்கி, முன்னே நகர்ந்து வந்து, அவனை வாயில் அடித்து, “தேவனுடைய ஆவி என்னை விட்டு வெளியே வந்த போது எந்த வழியாய் போனது?'' என்றான். “சரி, நீ திரும்ப வருகையில் அதைக் காண்பாய்'' என்றான். ஆம். அவன், ''இங்கே கவனி!'' என்றான், “நாங்கள் தேவனுடைய ஊழியக்காரர் ஆவோம். நாங்கள் நானூறு பேர் இருக்கிறோம். நீயோ ஒருவன் தான்” என்றான். ஆனால் மிகாயாவோ, “உன்னுடைய பிரச்சனை எங்கே இருக்கின்றதென்று நான் உனக்கு கூறுவேன்'' என்றான். ஆமென்! ”நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன்.'' என்றான், ஆமென்! “தேவன் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்ததை நான் கண்டேன். பரம சேனையெல்லாம் அவரை சுற்றி நிற்கிறதையும் கண்டேன். மேலும் இவன் செய்த விதத்தை பார்க்கும் போது, தேவனுடைய வார்த்தை இவன் மீது சாபங்களை தெளிவாக உரைத்திருக்கின்றது என்பது நமக்கு தெரியும்'' என்று கூறினான். 35தேவன் சபித்ததை உங்களால் ஆசீர்வதிக்க முடியாது, அதே போன்று தேவன் ஆசீர்வதித்திருப்பதை பிசாசால் சபிக்க முடியாது. அது ஒரு தனிப்பட்ட நபருடைய காரியமாகும், நீ எவ்வளவு ஏழையாக இருந்தாலும் அல்லது எவ்வளவு முட்டாள் தனமாக இருந்தாலும், எவ்வளவாக படிப்பற்றவனாக இருந்தாலும், எவ்வளவாக சீரிய பண்புகளில்லாதவனாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. எதை தேவன் ஆசீர்வதித்திருக்கிறாரோ அது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகும். தேவன் எதை சபித்திருக்கிறாரோ அது சபிக்கப்பட்ட ஒன்றாகும். எது சரி மற்றும் எது தவறென்றும் வித்தியாசப்படுத்த அறிந்திருங்கள். அந்த பிரசங்கிகளோடு கர்த்தர் இருக்கவில்லை என்பதை நன்றாகவும் மிகத் தெளிவாகவும் மிகாயா அறிந்திருந்தான். நல்லது, அந்த பிரசங்கிகளுக்கு என்ன ஆயிற்று? அவர்கள் என்ன செய்தனர் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் மிகச் சிறந்த முறையில் உடையுடுத்தியிருந்தனர். அவர்களுக்கு மிகச் சிறந்த ஆகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் விருந்துகளில் மற்றும் கூட்டணிகளில் மற்றும் மேலும் இவைகளைப் போன்றவைகளில் ஒன்றாகக் கூடி தங்கள் சொந்த வேதாகமக் கல்லூரி அறிவை மாத்திரம் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். ஆகவே வேதாகமம் கூறுகின்றது; மிகாயா அந்த தரிசனத்தைப் பார்த்து கொண்டிருக்கையில், ''தேவன் அங்கே கீழே சென்று ஆகாபை வஞ்சிக்கும்படிக்கு யாரை நாம் அனுப்பலாம்?“ என்றார். அப்பொழுது 'ஒரு பொய்யின் ஆவி நான் கீழே அங்கே சென்று அந்த பிரசங்கிகள் மூலமாக ஆகாபை வஞ்சித்து, தேவனுடைய வார்த்தையானது நிறைவேறத் தக்கதாக ஆகாப் அங்கே செல்லும் படிக்குச் செய்வேன்' என்று கூறினது'' என்றான். 36இப்பொழுது, இன்றைக்கு அநேக மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்! (இப்பொழுது, ஞாயிறு பள்ளி, நான் அதை நேசிக்கிறேன்) கவனியுங்கள், தேவனுடைய வார்த்தையை எடுக்கின்ற போர்வையில் காணப்படுகின்ற வஞ்சிக்கின்ற ஆவிகளுக்கு அநேக மக்கள் செவி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆவிகள், அவைகள் உலகத்தில் இருக்கின்றன. அவைகள் பிசாசுகள். அவைகள் அந்த இடங்களுக்கு சென்று மனிதர், போதகர்கள் மத்தியில் இருந்துவிடுகின்றன. சபை அங்கத்தினர்கள் மத்தியில் அவை சென்றுவிடுகின்றன. அவைகள் நல்ல மக்கள் மத்தியிலும் சென்று இருந்துவிடுகின்றன. பிறகு அவைகள் அவர்களை கொண்டு சென்றுவிடுகின்றன. அப்பொழுது அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கின்ற காரியங்களை பேசுகின்றனர், செய்கின்றனர், போதிக்கின்றனர், கடைபிடிக்கின்றனர். இன்றைக்கு போதகர்கள் தங்கள் சபையோரை, தங்கள் மக்களை சபைகளில் சீட்டுகட்டு விளையாட்டுகள், மற்றும் அநேகவற்றை விளையாட அனுமதிக்கின்றனர். இப்பொழுது, அது முற்றிலுமாக கத்தோலிக்கர் மாத்திரமல்ல, அவைகளைச் செய்கின்ற அநேக பிராட்டெஸ்டென்டுகளும் இருக்கின்றனர். அதற்கு மாற்றாக இருக்கின்ற ஒன்றைத்தான் அவர்கள் செய்ய முயற்சிக்கின்றனர். ஏதோ ஒரு புதிய திட்டத்தை மேற்கொள்ள அவர்கள் முயல்கின்றனர். பரிசுத்த ஆவியின் இடத்தை எடுத்துவிட கல்வியறிவை ஏற்றுக் கொள்ள அவர்கள் முயல்கின்றனர். நீங்கள் ஒருக்காலும் அதைச் செய்யமுடியாது, உங்களுடைய மனிதன் எவ்வளவாக கல்வியறிவு பெற்றிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. ஆனால் அதனுடன் பரிசுத்த ஆவியை அவன் பெற்றிருக்காவிடில், அவனுடைய கல்வியறிவானது எந்த ஒரு நன்மையையும் பயக்காது. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் ஸ்தானத்தை கல்வி ஒரு போதும் எடுக்காது. ஆமென். 37கவனியுங்கள், இதற்கு பதிலாக அவர்கள், நாம் முன்பு கொண்டிருந்த பழங்கால அனுபவத்திற்கு பதிலாக கைகுலுக்குதலை வைக்க முயன்றனர். இன்றைக்கு சபையானது நவீனமாகிவிட்டது. அவர்கள் நடந்து வந்து தங்களது வலது கரத்தின் ஐக்கியத்தை கொடுக்கின்றனர், அந்த விதமாகத் தான் அவர்கள் செய்கின்றனர். ஆனால் பழமை நாகரீகமான, பாவிகள் அழைக்கப்பட்டு, தேவனுடன் சரியாகின்ற அழுது புலம்புகின்றவர்களின் மர இருக்கையின் இடத்தை அதனால் எடுக்க முடியாது. இன்று அவர்கள் தேவனுடைய தசமபாகத்தின் இடத்தை எடுக்க முயற்சிக்கின்றனர். வேறெதோ ஒன்றை எடுக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். அதை அவர்கள் வேறுவிதமாக ஆக்க முயல்கின்றனர். அவர்கள் சென்று சபைகளில் பங்கோ விளையாட்டு விளையாடுகின்றனர், லாட்டரி விளையாட்டு விளையாடுகின்றனர். தேவனுடைய தசமபாகத்தின் இடத்தை லாட்டரி எடுக்கவே முடியாது. இரவு விருந்துகள், கம்பளம் விற்றல், சுற்றுலாக்கள், கடன்களை அடைக்க நிதி திரட்டுதல், அவை தேவனுடைய நித்திய தசமபாகம் மற்றும் காணிக்கையின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அது அப்படியாக செய்யவே செய்யாது. ஆனால் இன்னுமாக நாம் அதை செய்ய முயற்சிக்கின்றோம். 38அது என்ன? அது தான் தேவனுடைய வார்த்தைக்கு பதிலாக ஏதோ ஒன்றை மாற்றுப் பொருளாக வைக்க கீழே வந்து முயற்சி செய்கின்ற நயவஞ்சக ஆவிகள். அது என்றென்றைக்குமுள்ள மற்றும் நித்தியமான ஒன்றாகும். விசுவாசத்திற்கு மாற்றுப் பொருளாக வைக்க தேவனிடம் ஒன்றும் கிடையாது. விசுவாசத்திற்கு மாற்றுப் பொருள் எதுவுமே கிடையாது. நம்பிக்கை விசுவாசத்தின் இடத்தை எடுக்கவே முடியாது. நம்பிக்கை பாருங்கள்? நம்பிக்கை ஒரு காரியம்; விசுவாசம் மற்றொன்று. நம்பிக்கை அதற்கு நம்பிக்கையுள்ளதாயிருக்கிறது; விசுவாசம் அதை பெற்றுக் கொண்டுவிட்டது. ஒன்று அறிவுபூர்வமான விசுவாசம்; மற்றொன்றானது தேவனிடமிருந்து வருகின்ற நேரடியான வெளிப்பாடாகும். அது அதனுடைய இடத்தை எடுத்துக் கொள்ளாது. நாமோ முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் இந்த எல்லா மாற்றுக் காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். மிஷனரியை அனுப்புவதற்கு பதிலாக மகத்தான சபைகளைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மற்றுமொரு மாற்றுப் பொருள். ஒரு சபையை கட்டுவதற்காக இயேசு யாரையுமே நியமிக்கவில்லை. வேதாகமத்திலும் கூட அது நியமிக்கப்படவேயில்லை. நாம் வேத கலாசாலை கல்லூரியை ஏற்படுத்தியிருக்கிறோம், அது மிஷனரிமாரின் இடத்தை எடுத்துக் கொள்ள அவர்கள் விட்டுவிட்டனர். நாம்... ஒரு வேத கலாசாலை கல்லூரியை கட்ட வேண்டுமென்று இயேசு நம்மிடம் கூறவில்லை. அவையெல்லாம் சரிதான். அந்த இடத்தை கல்வியறிவு எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அவ்விதமாக அதனால் முடியவே முடியாது. இயேசுவினுடைய கட்டளையானது என்னவென்றால் அது கடைசி காலம் வரைக்கும். ஆகவே நாம் கொண்டிருக்கின்ற எல்லா மாற்று பதிற் பொருட்களும் மெய்யான இடத்தை எடுக்கவே முடியாது. 39முன்பொரு நாள் ஒரு அனுபவத்தை நான் பெற்றேன், மாற்றுக் காரியமாக இருந்த ஒன்று. முதன் முதலாக எனக்கு பல்வலி உண்டானது, அதனால் ஒரு பல்லை நான் பிடுங்க வேண்டியதாயிருந்தது. இக்காலைஅந்த இடத்தில் ஒரு பொய்ப் பல்லை ஒட்டவைத்திருந்தேன். என்னால் பேச முடியவில்லை. அது உண்மையானதின் இடத்தை எடுக்கவே முடியாது. இல்லை, ஐயா! ஓ, என்னே! மரத்தினாலோ, சுண்ணாம்பினாலோ, அல்லது நீங்கள் விரும்பும் எதினாலும் ஒரு மனிதனை உருவாக்கி அவனை எடுத்து அவனுக்கு ஆடை உடுத்துவித்து அவனுக்கு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். அவனுக்கு உணர்ச்சிகள், மனசாட்சி ஆகியவை இருக்காது. ஒரு உண்மையான மனிதனின் இடத்தை அவனால் எடுத்துக் கொள்ளவே முடியாது. ''நான் சபையை சேர்ந்துவிட்டேன். நான் இன்னும் நன்றாக செய்ய முயற்சிக்கிறேன்'' என்று வந்து கூறுகின்ற போலியான மனந்திரும்புதலும் கூட, ஒரு மனிதனை தன்னுடைய இருதயத்தில் வித்தியாசமானவனாக ஆக்குகின்ற, மெய்யான பழமை நாகரீகமான, தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியின் மனந்திரும்புதலின் இடத்தை அதனால் எடுத்துக் கொள்ள முடியாது. அதனால் முடியாது, ஏனெனில் அதினுள் ஜீவன் இல்லை. அவனுக்கு ஜீவன் கொடுக்க அதில் ஒன்றுமேயில்லை. 40இங்கே சமீபத்தில் இதை கொணர்ந்த அந்த மகத்தான கலைஞனை, இல்லை, இந்த மோசேயின் படத்தை உருவாக்கின அந்த சிற்பி. அவனுடைய பெயரை இப்பொழுது என்னால் கூற முடியவில்லை. அவன் ஒரு கிரேக்க கலைஞன். அதனால் அவன் மரிக்க நேர்ந்தது. அது மிக பரிபூரணமாக இருந்ததென்பதை அவன் கண்ட போது, அந்த மோசேயின் உருவத்தை அவன் கண்டபோது அவன் மிகவும் மெய்சிலிர்த்து உணர்ச்சிவசப்பட்டு அதனுடைய முழங்கால் பகுதியை அடித்து ''பேசு, மோசே!'' என்றான். அது மிக தத்ரூபமாக காணப்பட்டது. அது மிகப் பரிபூரணமாக உருவமைக்கப்பட்டிருந்ததால் அவனுடைய மனதிற்கு மோசேயைப் போன்றே இருக்கும் விதத்தில் காணப்பட்டது, அதினால் அவன் அதை உணர்வடையச் செய்ய வேண்டுமென்று சுத்தியால் அடித்தான். சபையின் மனதில் அதை வைக்கின்றது. நீங்கள் எவ்வளவாக மாற்றியமைக்க எதை வைத்தாலும், எவ்வளவு பெரிய ஜனக் கூட்டத்தை நீங்கள் பெற்றாலும், உங்கள் பாடல்களை எவ்வளவு நன்றாக பாடினாலும் எவ்வளவு உயர்ந்த ஆடைகள் உங்கள் சபையார் ஆடையுடுத்தினாலும், நீங்கள் எவ்வளவாக இதை, இதை அல்லது மற்றதை பெற்றாலும், நீங்கள் அடித்தாலும், உணர்ந்தாலும், எதுவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. பரிசுத்த ஆவியின் வடிவில் கிறிஸ்து கீழே வந்து அந்த சபைக்குள் பிரவேசித்து, மறுபடியும் பிறந்திருத்தலின் புதிய அனுபவத்தை அதற்கு அளித்தாலொழிய, ஜீவனின் இடத்தை அதனால் எடுக்க முடியாது. தேவனுடைய வார்த்தையின் இடத்தை அதனால் எடுக்க முடியாது. தேவனுடைய வார்த்தை தனியாக நிற்கின்றது. 41மிகாயா வார்த்தையைக் கொண்டிருந்தான். அவன் வார்த்தையைக் கொண்டிருப்பதை அறிந்திருந்தான். எழுதப்பட்டிருந்த வார்த்தையை அவன் கொண்டிருந்தான், ஒரு தரிசனத்தின் மூலமாகவும் அதை அவன் பெற்றுக் கொண்டான். தேவன் தம்முடைய வார்த்தையில் என்ன கூறியிருந்தார் என்பதையும் அவன் அறிந்திருந்தான். தரிசனத்தின் மூலம் தேவன் என்ன கூறியிருந்தார் என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவை இரண்டும் ஒன்றாக இணைந்தன. அது தான் சத்தியமென்பதை அவன் அறிந்திருந்தான், ஆகவே அவன் பயப்படவேயில்லை. ஆனால் இந்த மயக்கியிழுக்கும் ஆவி (Enticing Spirit) இன்றைக்கு என்ன செய்துள்ளது என்பதைப் பாருங்கள். இன்னும் அநேக சபை அங்கத்தினர்களை சேர்க்க, நல்ல சபை அங்கத்தினர்களை உருவாக்குவது, இது எல்லாவிதமான பழமை நாகரீக பரிசுத்த ஆவி போதித்தலுக்கெல்லாம் தாழ்ப்பாளை போட்டு சமுதாய விருந்துகள் வைத்துக் கொள்ளவும் கட்டிடத்தின் தரைமட்டத்தின் கீழுள்ள பகுதியில் விளையாட்டுகள் விளையாடவும் அனுமதியளித்தது. அது ஒரு போதும் உதவாது; பரிசுத்த ஆவிக்காக அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த அந்த மேலறைக்கு மாற்றாக அது பெண்களை ஒன்றாகக் கூடிவரச் செய்து நகைச்சுவைத் துணுக்கு மற்றும் போன்றவையை கூறவும், மற்றும் ஒன்றுமில்லாத அடிமுட்டாள் தனமான அநேக காரியங்களை செய்ய அனுமதித்தது. அதனால் ஒரு ஜெபக் கூட்டத்தின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. பெண்கள் அவர்கள் வெளியே சென்று உடையுடுத்தும் விதம், அது - அது ஒரு அவமானமாகும். 42''பாவம் அமெரிக்க மக்கள், அவர்கள் தங்களுடைய எல்லா துணிகளையும் அயல் நாடுகளுக்கு அனுப்பிவிட்டனர்'' என்று சகோதரன் நெவில் கூறின கருத்தை நான் கேட்டேன். அது சரி. அவர்கள் தங்களுடைய உள்ளாடைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவள்... அதுசரி. அவர்கள் அவைகளை மிஷனரிகளுக்கு கொடுத்துவிட்டிருக்கின்றனர் போலும், ஏனெனில் அந்த மிஷனரி, அந்த மக்கள் மற்றும் வேறு நாட்டிலுள்ள அஞ்ஞானிகள் அதை அணிந்திருக்கின்றனர். இந்த மக்களே ஆடைகளில்லாமல் இருக்கின்றனர், அதை இவர்கள் விரும்புகிறார்கள் என்று தெரிகின்றது. நான் உங்களுக்கு கூறுகிறேன், ஏதோ ஒன்று தாறுமாறாக்கப்பட்டுள்ளது, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் போதகமாகும். உங்களை அமிழ்த்துப் போடுபவை பிசாசுகள் தான். வேதாகமத்தில் ஒரு மனிதனைத் தவிர வேறு எவரும் தங்கள் ஆடைகளை தங்கள் சரீரத்திலிருந்து கிழித்து எறியவில்லை, அவன் பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த மனிதனாக இருந்தான். இன்றைக்கோ அவன் ஒரு மிருதுவான வடிவில் வருகிறான் - சமுதாயத்திலுள்ளவனாக, நல்லவனாக இருப்பது போல, எல்லாம் சரியானதாக இருப்பது போல. ''சீதோஷ்ணம் குளுமையாக இருக்கின்றது, நீ உன்னுடைய ஆடைகளை சற்று எடுத்து போட்டால் இன்னும் உனக்கு குளுமையாக உணர்வாய்'', மனிதன் முன்னும் பின்னாக முற்றங்களில் அரை நிர்வாணமாக நடக்கிறான் - அதே போன்று பெண்களும். நாய்களுக்கு இருக்கின்ற மரியாதையை விட குறைவாக மதிக்கப்படுகின்ற நிலைக்கு ஒருவருக்கொருவர் ஏன் செய்கிறீர்கள். உங்களுக்கு என்ன ஆயிற்று? நான் உங்களை புண்படுத்த முயலவில்லை. அது பிசாசினால் பீடிக்கப்பட்டிருத்தல் என்று தான் நான் உங்களுக்கு கூற முயற்சிக்கிறேன், மேலும் ''அது சரிதான்'' என்று உங்களுக்கு கூறுகின்ற வஞ்சிக்கின்ற ஆவிகளுக்கு நீங்கள் செவி கொடுக்கிறீர்கள், ஆனால் அது ஒரு பொய்யாகும். ஒரு கோதுமை செடியானது கோதுமையைத் தான் பிறப்பிக்கும். நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்தால், நீ அதைச் செய்யமாட்டாய். உன்னால் அதைச் செய்ய முடியாது. உன்னால் அதைச் செய்யவே முடியாது. நீ அறிவுப்பிரகாரமான விசுவாசத்தைக் கொண்டு, ''சகோதரன் பிரன்ஹாம், நான் வேதத்தை விசுவாசிக்கிறேன்'' என்று கூறலாம். அவ்விதம் இல்லையென்று உங்கள் ஜீவியமே சொல்லும். ஆமென். தேவனுடைய வார்த்தையை, வஞ்சிக்கின்ற ஆவிகள் உரைத்தல். 43தான் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதை மிகாயா அறிந்திருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். அவன் பொது மக்களால் மிகவும் மதிக்கப்படாதவனாக இருந்தான். அவர்கள் இந்த பிரசங்கிகளை விரும்பி, அவன் சத்தியத்தை மாத்திரமே உரைத்ததால் அவனை யாருமே விரும்பவில்லை. இப்பொழுது, இன்னுமொரு காரியம் சம்பவித்தது. தேவனுடன் அனுபவம் கொண்டிருக்கின்ற எந்த ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ சிறிது உணர்ச்சி வசப்பட்டவர்களாவர் என்று நான் நம்புகிறேன். நான் அதை நம்புகிறேன். அது சரி. ஆனால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு பதிலாக உணர்ச்சி வசப்படுதலை அவர்கள் எடுத்துக் கொண்டனர். நிறைய கூச்சல்களை மாத்திரம் அவர்கள் பெற்றுக் கொள்கின்றார், ஆனால் அதில் ஒன்றுமே கிடையாது. நீங்கள் கூச்சலுடன் வாழ்வது போலவே பரிசுத்தமாகவே வாழுங்கள், அப்பொழுது நீங்கள் சரியாக இருப்பீர்கள். உணர்ச்சிவசப்படுதல் நிச்சயமாக சரிதான், ''சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது“ ஆனால் மயக்கியிழுக்கும் ஆவிகளோ (Enticing Spirits) பரிசுத்த குழு ஸ்தாபன மக்களுக்குள் சென்றுவிட்டன், ஆகவே அவர்கள், ”அவர்களால் கூச்சலிட முடிவதால் அல்லது ஏனெனில் அவர்களால் நடனமாட முடிவதால், ஏனெனில் அவர்கள் உணர்ச்சியடையச் செய்ய முடிவதால்,'' என்பதின் பேரில் சார்ந்து கொள்கின்றனர். 44அங்கே இருந்த முதிய ஆள், பிரசங்கிகள், தீர்க்கதரிசிகள் எல்லாருக்கும் தலைவனாக இருந்தவன், தான் சரியாகத் தான் இருக்கிறேன் என்று மிக நிச்சயமானவனாக, தனக்கு இரு கொம்புகளை உண்டாக்கிக் கொண்டு சுற்றி சுற்றி நடனமாடி, ஒரு பெரிய கூச்சலைப் போட்டான். அவன் அந்த மற்றைய அசீரிய ராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற்றச் சென்றான். ஆனால் அது எப்படிப்பட்ட ஒரு பொய்யாக இருந்தது! தேவனுடைய வார்த்தை வித்தியாசமானதாக உரைத்திருந்தது. ஆமென். பாருங்கள், நீங்கள் சரியான ஒன்றை கொண்டிருந்து, உங்களுடைய உணர்ச்சியை சரியான ஒரு உணர்ச்சி வசப்படுதல் இயங்கச் செய்து கொண்டிருக்குமானால், நீங்கள் சரியாக உணர்ச்சிவசப்படலாம். கர்த்தருக்கு முன்பாக தாவீது நடனமாடினான், அவனுடைய மனைவி அவனைப் பார்த்து நகைத்தாள். பரலோகத்திலிருந்து தேவன் வெளியே கீழே பார்த்து ''தாவீது, நீ என் இருதயத்திற்கேற்ற மனிதன்'' என்றார். அவனுடைய நோக்கங்கள் சரியாக இருந்தது. அவனுடைய ஜீவியம் சரியாக அதன்படியே இருந்தது. ஆகவே நாம் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தமல்ல. நாம் சபைக்கு செல்வதனால், நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தமல்ல. அந்த வஞ்சக ஆவிகளை நீங்கள் நம்பாதீர்கள். ஒரு உண்மையான தேவனுடைய ஆவியானது, ஒரு உண்மையான தேவனுடைய வார்த்தையானது, தேவனுடைய சத்தியமாக இருக்கின்றது; அது தேவனுடைய வித்தாக இருந்து உங்களுடைய ஜீவியத்தில் தேவனை முன் கொணர்கிறது; நீங்கள் தேவ பக்தியாகவும், புனிதமாகவும் பரிசுத்தமாகவும் இருங்கள். 45உணர்ச்சிவசப்படுதல் மற்றும் அதைப் போன்று இருக்கின்ற அநேக மக்களின் மத்தியில், பின்புறமாக பேசுதல், சண்டைகள், பின்னிக்கொள்ளுதல்கள் மற்றும் எல்லா விதமான தேவனற்ற காரியங்களும் காணப்படுவதை நாம் பார்க்கலாம். சகோதரனே, அது சபையில் கந்தக அமிலம் போன்றதாகும். அது பிசாசின் வல்லமை. ஆண்கள் மற்றும் பெண்களின் ஆவி ஒருவருக்கொருவர் மத்தியில் சென்று, அதை புறம்பே தள்ளி, ''இது சரியல்ல, இது சரியல்ல, அது சரியல்ல'' என்று கூறுகின்றது. நீங்கள் பார்க்கப் போனால், பத்தில் ஒன்பது அந்த நபர் தான் கிளர்ச்சியை உண்டு பண்ணிக் கொண்டிருப்பார், அது சரியல்ல. ஆமென். சகோதரர் மத்தியில் பிரிவினையை தேவன் வெறுக்கிறார். நீங்கள் பயபக்தியாகவும், பரிசுத்தமாயும், தேவனை நேசித்து, அவர் பேரில் தரித்திருங்கள். உங்கள் ஜீவியமானது வேதாகமத்துடன் இணைந்து, சுத்தமான இருதயத்துடனும், சுத்தமான எண்ணத்துடனும், உன்னுடைய சகோதரனுக்கு அன்பைச் செலுத்தி, தேவனுடைய ராஜ்ஜியத்தை இன்னுமாக உயர்த்திக் காட்ட உன்னாலான சிறந்த முயற்சியை செய்தும் மற்றும் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தும், சரியாக ஆடையுடுத்தி, சரியாக ஜீவித்து, சரியானதை பேசி, சரியான இடங்களுக்கு சென்றுக் கொண்டிருந்தால், அப்படியானால் நீங்கள் விரும்புகின்ற எல்லா உணர்ச்சிகளையும் கொண்டிருக்கலாம், அப்பொழுது எல்லாரும் அதை விசுவாசிப்பார்கள். இயேசு, “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப் போனால், இனிமேல் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய அது வேறொன்றுக்கும் உதவாது. நீ உப்பாயிருந்தால் மட்டும் ஒரு நன்மையுமில்லை. ஆனால் நீ அதனுடன் சாரத்தைப் பெற்றிருப்பாயானால் நீ சாரமாயிருப்பாய் (salty). அப்பொழுது உலகம் தாகமுடையதாயிருக்கும். நீ சாரமாயிரு, அவர்கள் தாகமாயிருப்பார்கள். ஓ, என்னே 46வஞ்சக ஆவிகள் சென்று கொண்டிருக்கின்ற, பொய்க் கோலத்தில் பிசாசுகள். கவனியுங்கள், நாம் கடைசி நாளில் இருக்கின்றோம். நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். உலகமானது முடிவுநிலைக்கு வரத் தயாராக உள்ளது. இந்நாட்களில் ஒன்றில் வெடிக்கப் போகின்ற ஒரு கொப்புளக் கட்டி வெடித்து அதிலிருந்து வருகின்ற சீழ் வெளி வருவதைப் போன்று அது அசுத்தமாயிருக்கின்றது. அதை குணப்படுத்த எந்த ஒரு மருந்துத் தைலமும் கிடையாது. அவர்கள் மருந்தாய்த் தயாரிக்கப்படும் விலங்கின் குருதி நிணநீரை புறக்கணித்துவிட்டனர். அவர்கள் சிகிச்சையை நிராகரித்துவிட்டனர். ஒரு கட்டி ஒன்று எழும்புமானால், நீங்கள் பென்சிலினையோ அல்லது வேறெதையோ எடுத்து அதை அப்புறப்படுத்த தவறினால் அல்லது வேறெதையோ நீங்கள் எடுக்கத் தவறினால், அது வெடிக்கும் வரை பெரிதாகிக் கொண்டேயிருக்கும். அதைத் தான் உலகமும் செய்திருக்கின்றது. அது சிறிது காலத்திற்கு முன்னர், அது ஆரம்பித்தது, பிறகு கீழே சரிய ஆரம்பித்தது. அவர்கள் மகத்தான பெரிய செயல்திட்டத்தின் பேரில் ஆரம்பித்தனர், பொய்யான ஆவிகள் உள்ளே வந்து மக்களிடம் இதை, அதை அல்லது மற்றதை கூற ஆரம்பித்தன. நாம் தொள்ளாயிரம் மற்றும் வித்தியாசப்பட்ட ஸ்தாபனங்களாக உடைந்து போயிருக்கிறோம், ஒவ்வொருவரும் வித்தியாசப்பட்ட கருத்தைக் கொண்டிருத்தல். அவர்கள், “நாங்கள் இந்த கால கட்டத்தை விசுவாசிக்கிறோம். நாங்கள் விசுவாசிப்பது அவ்வளவு தான்'' என்கின்றனர். பரிசுத்த ஆவியானவர் உள்ளே வரத் தக்கதாக அவர்களால் இடங்கொடுக்க முடியவில்லை. சரியான பாதையை அவர்களால் கொண்டிருக்க முடியவில்லை. சத்தமிடக் கூடிய ஒரு மக்கள் குழுவை தேவன் கொண்டிருக்கிறார், அப்படியானால் எல்லாரும் சத்தமிட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அந்நிய பாஷையில் பேசக் கூடிய சிலரை அவர்கள் கொண்டிருக்கின்றனர், அப்படியானால் எல்லாரும் அந்நிய பாஷையில் பேச வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் இப்படிப்பட்ட காரியங்கள் முற்றிலுமாக வஞ்சக ஆவிகளால் மாசுப்படுத்தப்படும்படிக்காக இவைகளை கொண்டிருக்கிறார்கள், தேவன் அதில் முழுவதுமாகவே இல்லாதிருக்கையில் வஞ்சக மக்கள் இந்த உணர்ச்சி வசப்படுதலைச் செய்கின்றனர். பிறகு அவர்கள் வெளியே சென்று தாங்கள் விரும்புகின்ற எந்த ஒரு வாழ்க்கையையும் வாழ்ந்து பிறகு அதை ''கிறிஸ்தவன்” என்று அழைக்கின்றனர். ஆகவே உலகமானது உட்கார்ந்து கொண்டு பார்த்து, “ஓ, அதைப் பார்; அவர்களைப் போலவே நானும் இருக்கிறேன்'' என்கிறது. 47முன்பொரு இரவு பன்றியைக் குறித்தும், பாவியைக் குறித்தும் நான் கூறினது போல. நீங்கள் பழிசுமத்த முடியாது... ஒரு பாவி பாவிதான். அவனுடைய தவற்றை அகற்றித் திருத்த முயலாதீர்கள். அவனிடம் இதை அதை அல்லது மற்றதைக் கூற முயற்சிக்காதீர்கள். அவனுடைய ஆரம்பத்திலேயே ஒரு பாவியாக இருக்கிறான். துவக்கத்திலேயே அவன் ஒரு பன்றியாக இருக்கிறான். அவனுக்கு வித்தியாசத்தை உண்டாக்காது. அவன் சினிமாவிற்கு செல்வானானால் அவன் ஞாயிற்றுக் கிழமை செல்வான், அவன் குழு நடன ஆட்டங்களுக்கு செல்வான், அவன் இந்த எல்லாவற்றையும் செய்கிறான், துவக்கத்திலேயே ஒரு பாவியாக அவன் இருக்கிறான். அவனுடைய சுபாவம் ஒரு பன்றியின் சுபாவமாக இருக்கின்றது. அந்த வயதான பன்றி ஒரு குப்பை மேட்டிற்குள்ளாக தன்னுடைய மூக்கை நுழைத்து அதிலிருக்கிற தானியங்கள் மற்றும் எல்லாவற்றையும் தின்கிறது; ஆம், அது ஒரு பன்றியாக இருக்கின்றது. உங்களால் அதைக் குறை சொல்ல முடியாது. அது ஒரு பன்றி ஆகும். பாவிகளும் அந்த விதமாகத் தான் இருக்கின்றனர். ஆனால் நீங்கள் சென்று உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொண்டு, அவனுடன் உங்கள் மூக்கை ஒட்டிக் கொள்வீர்களானால், அவனை விட நீங்கள் மேலானவர்கள் அல்ல, ஆனால் மிக மோசமாக இருக்கிறீர்கள். அதின் மத்தியிலிருந்து வெளியே வாருங்கள். நாம் உலகத்தினிலிருந்து புறம்பே செல்வோமாக. நாம் செல்வோம், தேவனை அனுமதிப்போம், நாம் செல்வோம். 48எப்படி நீங்கள் செல்வீர்கள்? அநேக மக்கள் இன்று “நல்லது, சகோதரன் பிரன்ஹாம், எப்படி நாங்கள் அகன்று செல்லமுடியும்'' என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். 'செல்' என்பதின் பேரில் அநேக வேத தத்துவ போதனையை கேட்டிருக்கிறீர்கள். செல்லத் தக்கதாக அநேக மக்கள் வியர்வை சிந்துகின்றனர். அநேக மக்கள் வந்து, ''நான் நாற்பது நாள் உபவாசம் மேற்கொள்ளப் போகிறேன். ஏனெனில் ஏதாவதொன்றை என்னால் செய்ய முடியும்'' என்று கூறுகின்றனர். உங்களுக்கு நாற்பது நாள் உபவாசம் தேவையேயில்லை. உலகம் மற்றும் இந்த எல்லா பேய்த் தனமான காரியங்களையும் செல்லவிட்டு, உங்கள் இருதயத்தில் தேவனுடைய வார்த்தையை நீங்கள் எடுக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அதை எவ்வாறு செய்ய வேண்டுமென்று உங்களுக்கு போதிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் மேலும் கீழுமாக குதிப்பதாலோ செய்யமுடியாது, அல்லது அதை ஒரு நாற்பது நாள் உபவாசத்தின் பேரிலோ உங்களால் செய்ய முடியாது. சர்வ வல்லமையுள்ள தேவனிடம் அற்பணிக்கப்பட்ட ஒரு இருதயத்தின் மூலமாகத்தான் நீங்கள் செய்ய முடியும். 49ஒரு சிறு குழந்தையைப் போன்று. அங்கே இருக்கின்ற என் சிறு குழந்தையை நான் கவனித்தேன், இக்காலை அவனுக்கு அவனுடைய தாய் அந்த சிறு சட்டையை போட முயற்சித்துக் கொண்டிருந்தாள். அதனுடைய சிறிய கரத்தை சட்டையின் கைப் பகுதியில் போட அது விரும்பினது. அதில் தன்னுடைய கரத்தை போட அதனால் முடியவில்லை; எப்படி என்று அதற்குத் தெரியவில்லை. அதனுடைய சிறிய கரத்தை நீங்கள் வழி நடத்த வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். தன்னுடைய கரத்தை அதனுள் வைக்க அது விரும்புகிறது, ஆனால் அது அதை இங்குமங்கும் புரட்டிப் போடுகிறது. சட்டையின் கைப்பகுதிக்கு அதனால் செல்ல முடியாது. சட்டையின் கைப்பகுதியில் அது இல்லை என்று அறிந்திருக்கிறது. நீங்கள் இன்னுமாக புறங்கூறிக் கொண்டும், பொய் சொல்லிக் கொண்டும், எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தால் நீங்கள் தேவனுடன் சரியாக இல்லை என்பது உங்களுக்குத் தெரிகின்றதா. நீங்கள் எத்தனை சபைகளை சேர்ந்திருந்தாலும் எனக்கு கவலையில்லை, உங்கள் ஆத்துமாவானது மாற்றப்படும் வரை உங்களால் தேவனுடன் சரியாக இருக்க முடியாது, சகோதரனே, அது பழைமை நாகரீகமாகும், ஆனால் அது உன்னுடைய ஆத்துமாவில் பொங்கி வழிந்து அதில் உற்சாகத்தை தரும். 50தன்னுடைய கரத்தை அதற்குள் வைக்க முயற்சிக்கின்றது, தன்னுடைய கரத்தை அதற்குள் எவ்வாறு வைக்க வேண்டுமென்று சுட்டிக்காட்ட யாரோ ஒருவர் அதற்கு தேவைப்படுகிறது. பிறகு தன்னுடைய கரத்தை தன்னுடைய சிறிய சட்டையில் வைத்த பிறகு, எல்லாம் சரியாக இருக்கின்றது என்று அது அறிந்து கொள்கிறது. மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அந்த விதமாகத்தான் இருக்கும். அவன் உண்மையாக தேவனுக்குள் செல்கையில், தேவனுடைய வார்த்தையுடன் தன்னுடைய ஜீவியத்தை அவன் கவனித்து, பிறகு அதனுடைய ஒவ்வொரு சிறு சிறு கூறுபாடுடனும் அவன் ஒருங்கிணைந்திருப்பதை உணர்கிறான். அவன் நீடிய பொறுமை, தயவு, அமைதல், சாந்தம், வல்லமை, விசுவாசம், அன்பு, சந்தோஷம், சமாதானம் என்பவைகளைக் கொண்டிருப்பான். அவன் கொந்தளிக்கும் கடலைப் போன்று மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கமாட்டான். அவன் உறுதியாக நிலைத்திருப்பான். அவனுடைய இருதயம் தூய்மையானதாக இருக்கும். அவனுடைய இரண்டினில் ஒன்றாக தேர்தெடுத்தல் சரியாக இருக்கும். அவன் தேவனுடைய வார்த்தையுடன் ஒருங்கிணைகிறான் என்பதை அறிந்திருக்கிறான். பாதாளம் முழுவதுமே அவனை அசைக்க முடியாது. தேவனுடைய வார்த்தையுடன் அவன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணுக்கும் தெய்வீக அன்பையும், தன்னுடைய இருதயத்தில் தூய்மையை அவன் கொண்டிருக்கிறான், அவன் உலகத்தின் காரியங்களை அவன் விட்டு விலகியிருக்கிறான், அவை அவனுக்கு மரித்துப் போயிருக்கிறது; அவை இனிமேல் அவனுக்குத் தேவைப்படுவதில்லை. என்ன, பரிசுத்த ஆவியால் நிறையப்பட்ட அந்த பெண்ணை உங்களால் தேவனற்றதாய்க் காணப்படுகின்ற ஒரு ஜோடி ஆடைகளை அணிய வைத்து அங்கே தேவையில்லாமல் அவளை செல்ல வைக்க முடியாது. இல்லை, ஐயா. 51இப்பொழுது, அவள் தவறாயிருக்கிறாள் என்பதை அவளிடம் சென்று கூற வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அவள் உங்களை நம்பமாட்டாள், ஏனெனில் அவ்வளவு தான், அவள் அதை மாத்திரமே அறிந்திருக்கிறாள். அது தான் அவளுடைய சந்தோஷம். அந்த பெண் அந்த சிறிய காரியங்களை அணிந்து கொண்டு, மாலையில் வெளியே செல்கிறாள், அப்பொழுது தான் தங்களுடைய ஆண்கள் வீடு வந்திருப்பார்கள், அரசாங்கம், ''வீட்டிற்கு அருகிலுள்ள முற்றத்தில் புல் வெட்டு'' என்கிறது, ஆகவே... அது சரியா என்று கூறுங்கள்? ஸ்திரீயே, நீ தீயவள் என்று நான் கூற விழையவில்லை. ஆனால் சகோதரியே ஒரு அசுத்த ஆவி உன்னை ஆட்கொண்டுள்ளது என்பதை நீ உணர்வதில்லை. நீ அதை எதற்காகச் செய்கிறாய்? அது குளுமையாக இல்லை என்பதை போதுமான அறிந்து கொள்ளும் பகுத்தறிவு இருக்கின்றதே. அது உஷ்ணமாக உள்ளது. ஒரு அசுத்த ஆவி அதிலிருக்கிறது. நீங்கள், ''நானா? நானா, நான் சபைக்குச் செல்கிறேனே!'' எனலாம். நேபுகாத்நேச்சார் ஒரு மகத்தான மனிதன் ஆவன். ஆனால் அவன் அகங்காரமுள்ளவனான். அதனால், தேவன் அவனுக்கு காளையின் ஆவியைக் கொடுத்து, ஏழு வருடங்கள் அவன் புல்லைத் தின்ன விட்டுவிட்டார், அவனுடைய விரல் நகங்கள், இங்கே பெண்களில் சிலருக்கு இருப்பதைப் போன்று பெரிதாக வளர்ந்தன. அது சரி. அவன் பிசாசு பிடித்தவனானான். 52ஒரு மனிதன் பிசாசினால் பீடிக்கப்பட்டு அவனுடைய ஆடைகளையெல்லாம் களைந்து போட்டான். அவன்மேல் துணிகளை போட்டு அவனை மூட அவர்களால் முடியவில்லை. நான் என்ன கூற விழைகிறேன் என்று புரிகின்றதா? அது மயக்கியிழுக்கும் ஆவிகள் ஆகும். உங்கள் சபை அதை பொறுத்துக் கொள்கிறது. உங்கள் பிரசங்கி அதைக் குறித்து எதையும் கூற பயப்படுகிறார், நீங்கள் இனிமேல் உங்கள் தசமபாகங்களை செலுத்த மாட்டீர்கள் என்று பயப்படுகிறார். காரணம் அதுவே தான். அது தான் சிக்கல். என்னே, ஓ! நீங்கள் அவர்களை மனமாற்றமடையச் செய்து தேவனுடன் அவர்களை சரியாகச் செய்தாலொழிய எங்ஙனம் உங்களால் அந்த கூட்ட பருந்துகளுக்கு எதை பிரசங்கிப்பீர்கள்? அவை தங்கள் மூக்கை எந்நேரமும் அந்த செத்த பிணங்களுக்குள் தான் நுழைத்து நின்று கொண்டிருக்கும். உங்களுக்கு தேவையானது என்னவெனில் தேவையற்றதை வெளியே எறிந்து, கரைக்கு கரை வேகமாய் அடித்துச் செல்கின்ற ஒரு பழமை நாகரீக எழுப்புதல், மற்றும் ஆண்களையும் பெண்களையும் தேவனுடன் சரியாகச் செய்வதே தான். உலகத்தின் காரியங்களையெல்லாம் கட்டவிழ்த்துவிடுங்கள்! சாதாரண குரலை உயர்த்தி தாழ்த்தி மிருதுவாக பிரசங்கித்தலை அவிழ்த்துப் போடுங்கள். ஆமென். “சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்”. தேவன் அவ்விதமாகக் கூறினார். ''நீங்கள் உலகத்தை அல்லது உலகத்தின் காரியங்களை நேசித்தால், தேவனுடைய அன்பு உங்களுக்குள்ளில்லை. 53மக்கள் மேலும் கீழும் குதிக்கலாம், இரவு முழுவதும் சத்தமிட்டு, உலர்ந்த மாட்டுத் தோலின் மீது பட்டாணிக் கடலைகளை கொட்டுவது போல் அந்நிய பாஷையில் பேசலாம்; பிறகு அடுத்த நாள் காலை வெளியே சென்று போதுமான கோபத்துடன் சண்டையிடுவார்கள், சரியாக வெளியே சென்று பிறகு சபையில் ஏதோ ஒன்றைக் கூறி அது முழு சபையும் உடைந்து போகச் செய்யும். அது உலகத்தில் இருக்கின்ற வஞ்சக, பிசாசின் ஆவிகளைத் தவிர வேறொன்றும் இல்லை!வார்த்தைக்கு திரும்ப வர விரும்புகிறீர்களா, அதில் தேவன் கலப்பின்மையும், பரிசுத்தமானவராயிருக்கிறார். ஆமென். அது சரி. தேவனுடைய வார்த்தையை உச்சரித்துக் கொண்டிருக்கிற வஞ்சக ஆவிகள். 54இங்கே சிறிது காலத்திற்கு முன்னர், இங்கே ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொண்டிருந்தான், கத்தோலிக்கர்கள் அங்கே பன்னிரண்டு பேரை கொண்டிருந்தனர். அவளுடைய இறுதியாக மாதவிடாயின் நிறுத்த (Menopause) காலங்களில், அது அவளுடைய கைகளிலும் அவளுடைய நெற்றியிலும் வெளிவந்தது. ஒரு நல்ல பரிசுத்த ஆவியின் பிரசங்கியானவன்... நான் நினைத்தேன். அவள் கைகளிலிருந்து வெளி வந்த அதை ஒரு பாட்டிலில் பிடித்து வைத்திருந்து ஒரு மனிதன் அதைக் கொண்டு மக்களை அபிஷேகம் பண்ணிக் கொண்டிருந்தான். வியூ இரக்கம்! அது அந்தி கிறிஸ்து. அவளுடைய மூக்கிலிருந்தோ அல்லது அவளுடைய தலையிலிருந்தோ அல்லது எதிலிருந்தோ இரத்தம் வந்தால் கூட அது எனக்கு ஒரு பொருட்டல்ல, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இடத்தை எந்த ஒரு இரத்தத்தினாலும் எடுத்துக் கொள்ள முடியாது. எனக்குத் தெரிந்திருப்பதெல்லாம் அந்த ஒரேயொரு இரத்தம்தான். அவளுடைய ஒரு கையிலிருந்து எண்ணெயும் மற்றொரு கையிலிருந்து திராட்சரசமும் ஊற்றிக் கொண்டிருக்கிறவளாயிருக்கலாம், ஆனால், அதை எந்த ஒரு மத உருவில் நீ உபயோகப்படுதினாலும், அது பிசாசாகும். அந்த விதமான ஒரு காரியத்திற்கு பிரசங்கிகளும் கூட விழுவதைக் காணும்போது! நமக்குள்ள தேவையென்னவெனில் வழிகாட்டும் புஸ்தகத்திற்கு திரும்ப வருவது தான், தேவனுடைய வார்த்தைக்கு திரும்ப வருவது தான், தேவனுடைய வார்த்தைக்கு திரும்ப வருதலாகும்! இது தான் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வேதாகமமாகிய தேவனுடைய வார்த்தையாகும். நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, அந்த விதமாவதற்கு எனக்கு பயமாயுள்ளது. என்னுடைய சந்தோஷத்தில் சிலவற்றை நான் இழக்க வேண்டியிருக்குமே எனலாம். என்ன ஆயிற்று? சந்தோஷம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா. 55வெளியே சென்று மது அருந்தும் ஒரு குடிகாரனை நான் கடிந்து கொள்வதில்லை என்று நான் கூறியிருக்கிறேன். அவன் போதையிலிருக்கிறான். அவனுக்குத் தெரியாது. அவன் காலையில் எழும்பும் போது, அவனுக்கு மனச்சோர்வு, குடியின் பின்விளைவுகள் ஏற்படுகின்றன. வெளியே சென்று தனக்கு இரண்டு அல்லது மூன்று பீர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டு, பிறகும் வெளியே சென்று விஸ்கி மற்றும் அதைப் போன்ற எல்லா மதுவகையும் வாங்கிக் கொள்கிறான். சிகரெட்டை உறிஞ்சும் அவன் அங்கே உட்கார்ந்து கொண்டு புகைத்து, ஒரு சரக்கு ரயில் வண்டியைப் போன்று தன் மூக்கில் புகையைக் கக்குகிறான். அவ்வளவு தான். நான் அவனைப் பழிக்கமாட்டேன்; அவனுக்கு தெரிந்ததெல்லாம் அந்த சந்தோஷம்தான். அது மட்டுந்தான் அவனுக்குத் தெரியும். சுபாவத்திலேயே அவன் ஒரு பன்றி ஆவான். சந்தோஷம் என்று இந்த காரியங்களின் பேரில் சார்ந்து கொண்டு கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்ளும் உனக்கு வெட்கம் உண்டாவதாக, ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது சந்தோஷத்தின் உற்பத்தி நிலையமாக இருக்கிறதே. மனச்சோர்வு கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் தான் ஒரு பரிபூரண மட்டுமீறிய கிளர்ச்சி போதையாகும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பானத்தை குடித்து, பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டிருப்பீர்களானால், நீங்கள் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லும் வரைக்கும் பொங்கும் உணர்ச்சியில் மூழ்கியவர்களாயிருப்பீர்கள். ஆமென், சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷம். நிலையான ஒரு ஊக்க உணர்ச்சியானது இருந்து கொண்டேயிருக்கிறது. ஒரு நிலையான மட்டுமீறிய கிளர்ச்சி போதையாகும்! ஆமென். அது தான் தேவனுடைய வார்த்தையாகும். 56சபையோ சுற்றி வந்து மற்றொரு காரியத்தை எடுத்துக் கொள்கிறது. இன்பப் பொழுதுபோக்கு கேளிக்கை கொள்வதற்காக எல்லாரும் கடற்கரைக்கு சென்று ஒரு சிறிய விருந்தை அவர்கள் வைக்க வேண்டியதாயுள்ளது. ஐக்கியத்திற்காக, எல்லாருமாக சீட்டாட்ட விருந்தில் கூடி வருதல். சரி, சில நேரத்தில் ஒரு அங்கத்தினர் வீட்டிலோ, சில சமயங்களில் சபையின் அடித்தளத்தில் நடனத்தை வைக்கின்றனர். ஒரு நடனம், திருப்தி கொள்வதற்காக எதோ ஒன்றை எடுத்துக் கொள்கின்றனர், பெற முயல்கின்றனர், என்ன காரணம் எப்படியாயினும் அவர்கள் ஒரு பெரிய பன்றிக் கூட்டம் தான். துவக்கத்திலேயே அவர்கள் பன்றிகளாயிருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவிடம் தொடர்பு கொள்வார்களானால் அவர்கள் அதிகமான சந்தோஷத்தைக் கொண்டு, அந்த காரியங்கள் நடு இரவைக் காட்டிலும் அவர்களுக்கு மரித்ததாயிருக்கும். சுவிசேஷமானது ஆவியினால் பருகப்படுமானால், சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமாயிருக்கும். பாவியைக் குற்றப்படுத்தாதே; அவன் மீது இரக்கங் கொள்ளுங்கள். அவன் இன்னுமாக தன்னுடைய குழாயில் புகை பிடிக்கட்டும், தன்னுடைய மதுவை அவன் குடிக்கட்டும், தன்னுடைய சீட்டாட்ட விருந்தை அவன் கொண்டிருக்க விட்டுவிடுங்கள். அது அவனுடைய இன்பமாயிருக்கிறது. அவனை பழிக்காதீர்கள். அவன் மிகவும் களைப்புற்று, சோர்வடைந்து வீட்டுக்கு வருகையில், ஏதோ ஒரு இன்பம் அவனுக்கு தேவைப்படுகிறது. நீயோ செய்ய வேண்டியது என்னவெனில், அதை விட சுவிசேஷமானது பத்தாயிரம் மடங்குகள் அளிக்கின்றது என்பதை உன்னுடைய ஆழ்ந்த தேவ ஜீவியத்தைக் கொண்டு அவனுக்கு நிரூபிக்க வேண்டும் (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி ) அவன் அந்நிலையில் மரிப்பானானால், தன்னுடைய மதுவில், அவன் நரகத்திற்கு செல்வான். அது தான் பிசாசின் மட்டு மீறிய கிளர்ச்சி போதையாகும். அவன் தன்னுடைய சிகரெட்டு குழாயை இழுத்துக் கொண்டே இருந்து மரித்து போவானானால், தேவன் அவனுடைய நியாயாதிபதியாக இருக்கிறார். அவன் அங்கே வெளியே சென்று, நடனமாடி, ஒழுக்கங்கெட்ட ஆடைகளை அணிந்தவனாக இருந்து மரிப்பானானால், தேவன் அவனுடைய நியாயாதிபதியாக இருக்கிறார். ஆனால் ஒரு காரியம் இருக்கின்றது, மேலே தேவனை நோக்கிப் பார்த்து, ''வானங்கள் திறந்திருக்கிறதையும் வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் நான் காண்கிறேன்'' என்று கூறின ஸ்தேவானைப் போல் பரிசுத்த ஆவியின் அபிஷேகிக்கும் வல்லமையின் கீழ் நீங்கள் மரிப்பீர்களானால், ஒரு தூக்கணாங் குருவி தன்னுடைய கூட்டிற்கு செல்வது போல, நீங்களும் பரலோகத்தை நோக்கிச் செல்கிறீர்கள். ஆமென். 57தேவனுடைய வார்த்தையை உச்சரிக்கும் வஞ்சக ஆவிகள்! அதை அப்படியே விட்டுவிடுங்கள். “எப்படி நீங்கள் அதைச் செய்வீர்கள், சகோதரன் பிரன்ஹாம்?'' அதைச் செல்லவிடுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவு தான். தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாததை எழுப்ப முயற்சிக்காதீர்கள். பீடத்தண்டை சென்று அதின் மேல் அடித்து, ''தேவனே, எனக்கு பரிசுத்த ஆவியைத் தாரும்! கர்த்தாவே, எனக்கு பரிசுத்த ஆவியைத் தாரும்!'' என்று கூச்சலிடாதீர்கள். நீ பீடத்தண்டை அடிப்பதினால் அவர் வரப் போவதில்லை. அது ஒரு பலனையும் அளிக்கப் போவதில்லை. இல்லை. அந்த விதமாக அது வருவதில்லை. அவரை, அவருடைய வார்த்தையின்படி எடுப்பதே தான் அது. பேதுருவைப் பாருங்கள். பேதுரு நெருக்கத்தில் இருந்தான், அவன் மரித்துப் போவான் என்று காணப்பட்டது. கர்த்தர் ஜலத்தின் மேல் நடந்து வருவதை அவன் கண்டான். அவன், “ஆண்டவரே! நீரேயானால் நான் வரக் கட்டளையிடும்'' என்றான். கர்த்தர், ''வா'' என்றார். இப்பொழுது பேதுரு, ''ஆண்டவரே ஒரு நிமிடம் பொறும், என்னால் ஜலத்தின் மேல் நடக்க இயலுமா அல்லது இல்லையா. ஓ, ஆண்டவரே, இந்தப் படகில் அந்நிய பாஷையில் பேசி ஆவியில் நடனமாடத் தக்கதாக போதுமான ஆவியை எனக்கு அருளும். அப்பொழுது நான் படகை விட்டு வெளியே வரமுடியுமா என்று நான் நாற்பது நாள் உபவாசம் இருந்து பார்க்க என்னை அனுமதியும். ஹ ஹ என்று கூறினானா?''. இல்லை, ஐயா! அவன் தேவனை அவருடைய வார்த்தையின் பேரில் எடுத்தான், அப்படி நடக்க ஆரம்பித்தான். தேவன் அவனை வழி நடத்தினார். 58தேவன் மோசேயை சந்தித்து, “மோசே, நீ எகிப்துக்குச் சென்று பார்வோனிடம் என் ஜனங்களைப் போக விடவேண்டும் என்று கூறு'' என்று கூறியிருப்பாரானால் அதற்கு மோசே, ''முதலில் நான் நாற்பது நாள் உபவாசம் மேற்கொண்டு உமக்கு கீழ்ப்படியத் தக்கதாக போதிய விசுவாசம் எனக்கு இருக்கிறதா என்று நான் பார்க்க அனுமதியளியும் தேவனே. எனக்கு ஏதாவதொன்றை, வேறெதாவதொன்றை தாரும், கர்த்தாவே, உமக்கு நான் ஒன்றைக் கூறட்டும், நான் முதலாவதாக ஆவிக்குள்ளாகிறேனா என்று நான் பார்க்கட்டுமா?'' என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும். மோசே எந்த ஒரு கேள்வியையும் கேட்கவில்லை, அவன் தேவனை அவருடைய வார்த்தையின் பேரில் எடுத்துக் கொண்டான், அப்படியே புறப்பட்டுச் சென்றான். அந்த விதமாகத் தான் நீங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள், தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுப்பதே. அப்பொழுது அதை உங்களால் செய்ய முடியுமென்பதை அறிந்து கொள்வீர்கள். ஏதோ ஒன்று நடக்கும் வரை அவன் காத்திருக்கவில்லை, அவன் முன்னே சென்று அதைச் செய்தான். 59நீண்ட காலமாக அங்கே மேலே கர்மேல் பர்வதத்திலிருந்து பிறகு கீழே எலியா வந்த போது என்ன ஆயிற்று? அவன் ஒரு ஏழை விதவை ஸ்திரீயை சந்தித்தான். அவள்... அவள் ஒரு அந்நியப் பெண், ஒரு புறஜாதியாவாள். அவன் அவளை அங்கே சந்தித்த போது, அவள் முற்றத்தில் விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்தாள். தேவன் அவனிடம், “அங்கேயுள்ள அந்த விதவையின் வீட்டிற்குச் செல்” என்று கூறினார். ஒரு பிரசங்கி செல்லத் தக்கதான எப்படிப்பட்ட ஒரு இடம் அது! அப்பொழுது அவன் அங்கேயிருந்த அந்த விதவையின் வீட்டிற்குச் செல்கிறான். அவள் பொறுக்கின போது, அவள் இரண்டு விறகுகளை வைத்திருந்தாள். அவன், ''என்ன செய்து கொண்டிருக்கிறாய்“ என்றான். “விறகுகள் பொறுக்குகிறேன். இரண்டு மக்காச்சோள அடைகளை செய்ய போதுமான மாவை மாத்திரமே நான் வைத்திருக்கிறேன். அவ்வளவு தான் என்னிடம் மீதியாக உள்ளது. மூன்று வருடங்களாக மழை என்பதே பெய்யவில்லை'' என்றாள். மேலும் அவள், ''இதோ, இந்த சோள அடைகளை நான்ஆயத்தப்படுத்தப் போகிறேன். பிறகு நானும் என் பிள்ளையும் அதை சாப்பிட்டு பிறகு செத்து போவோம்” என்றாள். ''முதலில் எனக்கு ஒன்று ஆயத்தப்படுத்து!'' என்று அவன் கூறினான். அல்லேலூயா! ஓ, நான் சிறிது நியாயமற்றவனாக இருக்கிறேன் என்பதை நான் அறிவேன், ஆனால் எப்படியாயினும் நான் கர்த்தரின் பட்சத்தில் இருக்கின்றேன். “முதலில் எனக்கு ஒன்று ஆயத்தப்படுத்து. ஏனெனில் இது கர்த்தர் உரைக்கிறதாவது...” என்றான். உங்களுக்குப் புரிகின்றதா? 60அது என்ன? “முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்'', ”தேவனுடைய ராஜ்ஜியத்தையும் சிறிது கூச்சல்“ அல்லது, ”தேவனுடைய ராஜ்ஜியத்தையும் சிறிது உணர்ச்சி வசப்படுதலையும்“ அல்லது, ”தேவனுடைய ராஜ்யத்தையும்“, ''சிறிது அது அல்லது இதுவும் அல்ல” ஆனால், ''தேவனையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இந்த மற்றவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்'' முதலாவதாக வையுங்கள்! இப்பொழுது, அந்த விதவை அதைக் கேட்டாள், “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்''. அவள், ''அது கர்த்தருடைய வார்த்தையாகும். ஏனெனில் அவர் தேவனுடைய பரிசுத்த மனிதனாவார். அது தேவனுடைய தீர்க்கதரிசியாகும், அது உண்மை என்பதை நான் அறிவேன். ஆகவே அது தேவனுடைய வார்த்தையாகும்,'' என்றாள். இப்பொழுது, அவளோ அதை எப்படி ஆயத்தப்படுத்துவது என்று அக்கம் பக்கத்தாரிடம் கேட்க அவள் ஓடவில்லை. அவள் தன்னுடைய பங்கை... அண்டை வீட்டாரிடம் கூற, இப்பொழுது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பிரசங்கி என் வீட்டில் இருக்கிறார், இதை கூறுகிறார். சுசி, இதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?'' என்று கூறவிரும்பவில்லை. அவள் உள்ளே சென்று கொட்ட ஆரம்பித்தாள். அவள் கொட்டினாள். அவள் இன்னும் அதிகமாக கொள்ளத் தக்கதாக, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொட்டினாள். இன்றைக்கு உலகத்திற்கு தேவையாயுள்ளது அதுவேயாகும், ஒரு அருமையான பழைய நாகரீக, உங்களிடமிருக்கிற எல்லாவற்றையும் கொட்டுதலாகும். அல்லேலூயா! 61அவள் வெளியே கொட்டினாள், ஆதலால் அவள் நிரப்பப்பட ஏதுவாக இருந்த அவளிடமிருந்த எல்லா எண்ணையையும் கொட்டினாள், அவளுக்கு இருந்த முழு எண்ணையையும் மற்றும் அவளுக்கிருந்த எல்லா போஜனத்தையும் பிரசங்கிக்கு, தேவனுடைய ராஜ்ஜியத்துக்கு அளித்துவிட்டாள். ஆகவே அவள் எல்லாவற்றையும் சேர்த்து அங்கே அதில் கொட்டின போது, தேவன் கீழே வந்து மாவு பானையை நிறைத்தார், எண்ணெய் கலசத்தை நிறைத்தார். அவள் மறுபடியுமாக பிரசங்கியின் தட்டில் கொட்டினாள். அது திரும்பவும் வந்து மறுபடியும் அதை நிரப்பிற்று. அவர் உள்ளே கொட்டினார். அவள் ஒவ்வொரு தடவையும் கொட்டின போது, அவர் நிரம்பச் செய்தார். இன்றைக்கு, மனிதனானவன் இந்த எல்லா உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டேயிருக்கிற முட்டாள்தனத்தையும் மற்றும் கிறிஸ்தவத்தை போலியாக செய்து கொண்டிருப்பதையும் வெளியே கொட்டி, பரிசுத்த ஆவியானவர் தம்முடைய இடத்தை எடுத்துக் கொள்ள அனுமதிப்பானானால் தேசம் முழுவதும் அடித்துச் செல்லும் ஒரு எழுப்புதலானது எட்டாவது மற்றும் பென் தெருவில் ஆரம்பிக்கும் என்று நான் கூறுகிறேன். முட்டாள்தனமான அர்த்தமற்ற காரியங்களை விட்டு வெளியேறுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு திரும்ப வாருங்கள். வெளியே கொட்டுங்கள், நீங்கள் நிரப்பப்பட ஏதுவாயிருக்குமே. அதை வெளியே தள்ளுங்கள், தேவனை உள்ளே வரவிடுங்கள். நீங்கள் வெளியே கொட்டுங்கள், தேவன் உள்ளே நிரப்புவார், ''நீ இதைச் செய்ய வேண்டும், நீ அதை செய்து தான் ஆக வேண்டும்; இதை நீ செய்தே தீர வேண்டும், அதைச் செய்தே தீர வேண்டும்'' என்கிற இழிவான காரியங்கள். அதை மறந்தேவிடு, அதை உன்னுடைய ஆத்துமாவிலிருந்து வெளியே எடுத்து கொட்டி விடு “தேவனே, இதிலிருந்து என்னை முற்றிலும்... இந்த நாளிலே, முற்றிலும் உம்முடையவனாக கர்த்தாவே, நான் உடைந்த இருதயத்தோடு வருகிறேன். நான் பாவத்தை எண்ணி உடைந்து போயிருக்கின்ற ஆவியுடன் வருகிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். நீர் என்னை நேசிக்கிறீர் என்பதை நானறிவேன். இந்த நாற்பது நாள் உபவாசங்கள் போன்ற எல்லா முட்டாள்தனங்களையும், இந்த, அந்த அல்லது மற்றது போன்ற எல்லா அர்த்த மற்றதையும் மறந்து, தேவனுடன் நெருங்க முடியுமா என்று நான் பார்க்கிறேன்” என்று கூறுங்கள். அதை நிறுத்துங்கள்! 62நாற்பது நாள் உபவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு கூறுகின்ற எந்த ஒன்றும் வார்த்தையில் இல்லை. ஒரு காரியமும் இல்லை. தேவன் உங்களிடம் கூறினாலொழிய நீங்கள் உபவாசிக்க வேண்டும் என்று கூறுகின்ற எந்த ஒரு காரியமும் உலகத்தில் கிடையாது. நீங்கள் உபவாசித்தால், நீ சகோதரனே நீ உபவாசிக்கையில், சகோதரனே, எல்லா நேரமும் நீ சந்தோஷமாயும் மகிழ்ச்சியாயும் இருப்பாய். “மாயக்காரரைப் போல மனுஷர்களுக்கு முன்பாக, முகத்தை வாடப் பண்ணி, துயரார்ந்த முகமாக காண்பிக்காதீர்கள், ”நான் நாற்பது நாள் உபவாசத்தில் இருக்கின்றேன், நான் அதிகம் உண்பதில்லை. நான் முப்பது பவுண்டு எடை குறைந்துவிட்டேன், இது முடிந்த பிறகு நான் நன்றாகக் காணப்படுவேன். ஓ , முட்டாள்தனம்! அது பிசாசின் வஞ்சக ஆவிகளாகும். பீடத்திற்கு சென்று “மகிமை, மகிமை, மகிமை”, என்று உன் சக்தி போகும் அளவிற்கு கூறு, “பரிசுத்த ஆவியை நீ பெறும் முன்னர் அந்நிய பாஷையில் நீ கட்டாயமாக பேச வேண்டும்'' என்கிறார்கள். முட்டாள்தனம்! அதை வெளியே கொட்டு! உங்களுடைய முறைமையிலிருந்து அதை வெளியே எடுத்துப் போட்டு தேவனுடைய வார்த்தையின் பேரில் வாருங்கள்! ''நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றான். தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளாவிடில், அவர் தேவன் அல்ல. ஆமென். வெளியே கொட்டுங்கள். நிரப்பப்படுங்கள். ஆமென். வீயூ! எனக்கு அது பிடிக்கும். அது அவருடைய வார்த்தையாகும். தேவன் அவ்விதமாகக் கூறினார். அது சரியே. தேவன் அதைக் கூறியிருப்பாரானால், தேவன் அதைப் பார்த்துக் கொள்வார். அது சரியே. நீ செய்கின்ற எல்லா ஆயத்தங்களும், நீ சபைக்கு சென்று கொண்டிருந்தாலும்... 63இங்கே இரயில் பெட்டிகள் செய்யப்படும் தொழிற்சாலைகளில் போல், அதில் பெரிய சரக்குகள், அல்லது ஒரு மக்கள் பயணம் செய்கின்ற பெரிய இரயில் பெட்டிகள் தயாரிக்கின்றனர். நான் அங்கே முன்பு வேலை செய்வது வழக்கம். அவர்கள் அந்த பெரிய பெட்டிகளை மற்றும் எல்லாவற்றையும் செய்து, நல்ல கடினமான மரத்தை வைத்து, அதினுள்ளே சுற்றிலும் திடம்மிக்க கருங்காலி மரத்தை வைத்து, எல்லாம் மிக அழகாக இருக்கும்படி வடிவமைத்து, அதை தண்டவாளத்தின் மீது வைப்பார்கள், அது ஒரு கதவு ஆணியைப் போன்று அப்படியே அசைவற்றுக் கிடக்கும். அங்கே ரயில் எஞ்ஜின் நின்று கொண்டிருக்கும், அதில் நீராவி இருக்காது. அது அப்படியே கிடக்கும். இன்று அதற்கான தேவை என்னவெனில் கொதிகலத்தில் நெருப்பு இருப்பதேயாகும். இன்று அதற்கு தேவையானது என்னவெனில் கொஞ்சம் நீராவி இன்றைக்கு சபைக்கு கொதிப்பதற்குத் தேவையாயிருப்பது உங்கள் வாழ்க்கையிலிருந்து பாவத்தை அறவே கொதித்து வெளியேற்றும் அந்த அதிக வெப்பமான கொதிக்கின்ற காரியமானது, அன்பு தான். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயில்லாவிடில், நீங்கள் காணாத தேவனை எப்படி உங்களால் நேசிக்க முடியும்? பெருந்திரளான பாவத்தை அன்பு மறைக்கின்றது. தேவனுடன் அன்பு கொள்ள ஆரம்பியுங்கள், அப்பொழுது ஒருவரிலொருவர் நேசிப்பீர்கள், பிறகு சபையை நேசிப்பீர்கள், அப்பொழுது நீங்கள் நோக்கத்தை நேசிப்பீர்கள், தேவ பக்தியாயிருக்கின்ற எல்லாவற்றையும் நீங்கள் நேசித்து, உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களை புறம்பாகவே வைத்துக் கொண்டிருப்பீர்கள். 64வஞ்சக ஆவிகள் சுற்றிலும் சென்று மக்களிடம் இது, அது அல்லது மற்றது என்று கூறிக் கொண்டிருக்கின்றன, ''அவர்கள் இதைச் செய்ய வேண்டும். அவர்கள் அதைச் செய்ய வேண்டும்.'' அது ஏனென்றால் ஸ்தாபனங்கள் எழும்பி “நல்லது, இப்பொழுது, நான் நம்புகிறேன் ஒரு மனிதன்... வேதாகமத்தில் சத்தமிடுவது என்ற காரியத்தை நான் விசுவாசிக்கிறேன்'' என்று அவர்கள் பெற்றுள்ள வெளிப்பாடு என்று கூறுகின்றனர். அதுசரி. அது உண்மையே. ''நீங்கள் சத்தமிடும் போது அதைப் பெறுகிறீர்கள்'' என்று கூறி அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிவிட்டார்கள், ஆனால் நீங்கள் அவ்வாறு பெறுவதில்லை. அடுத்தது எழும்பி, ''அந்நிய பாஷையில் பேசுவது“ என்று கூறுகிறது. அது சரி. அது வேதாகமத்தில் இருக்கின்றது. ''நல்லது, நீங்கள் அந்நிய பாஷையில் பேசுகையில் அதைப் பெறுகிறீர்கள்.'' ஆனால் அவர்களில் அநேகர் அந்நிய பாஷையில் பேசுகிறார்கள். ஆனால் அதை பெற்றிருக்கவில்லை. அது அதுவல்ல. இல்லை, ஐயா. அவர்களில் அநேகர், ''நல்லது, நாங்கள் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்'' என்று கூறினார்கள். 65இங்கே அவர்கள் தங்கள் தலைகளில் கொம்புகளை வைத்துக் கொண்டு மேலும் கீழுமாக குதித்து தீர்க்கதரிசனம் கூறிக் கொண்டிருந்த இந்த தீர்க்கதரிசிகளை கவனியுங்கள், “நீங்கள் ஒவ்வொருவரும் பொய் சொல்கிறீர்கள்'' என்று மிகாயா கூறினான். ஆமென். சரி. தேவன் அவ்விதமாக வருவதில்லை. பாவத்தை நினைத்து உருகுகின்ற, உடைந்த ஆவியையுடையதாய் வருகின்ற ஒரு உத்தம இருதயத்திற்குள் தான் தேவன் வருகிறார். ''கண்ணீரோடு விதைக்கிறவன் தான் அறுத்த கதிர்களை சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்” ஆமென். நண்பனே அதை சரியாக புரிந்து கொள். மிக அநேக பிசாசியல்கள், மனித ஆத்துமாவில் கிரியை செய்து கொண்டிருக்கின்ற பிசாசுகள் அது எங்கே தன் கனியைத் தருகிறதென்று பாருங்கள். எந்த விதமான ஒரு ஜீவியத்தை ஒரு நபர் ஜீவிக்கிறாரென்று கவனியுங்கள். அவர்கள் எவ்விதமாக செயல் புரிகின்றனர் என்பதை கவனியுங்கள். எவ்விதமாக அவர்கள் செய்கின்றனர் என்பதை கவனியுங்கள். அது கூடாதது... நான் உங்களிடம் இவ்வாறு கூறியிருப்பேனானால், “ஒரேயொரு வழிதான்... இங்கே கார்கள் இருக்கின்றன, எல்லாம் இங்கே வரிசையாக இருக்கின்றன. பரலோகம் சார்ஸ்ஸ் டவுனில் இருக்கிறது. உங்களால் நடந்து செல்ல முடியாது. உங்களால் செல்ல முடிகின்ற ஒரேயொரு வழி காரில் தான். கோட்டை கடந்து வருகின்ற ஒவ்வொரு மனிதனும் ஐந்து காலன்கள் அளவு எரிபொருளை கொண்டு வர வேண்டும். கார் இங்கே இருக்கின்றது, ஆனால் அதில் எரிபொருள் இல்லையெனில் அதனால் இயங்க முடியாது. நல்லது, அதே விதமாக, பரலோகத்திலும் பரிபூரணமான அந்த வழியாகத் தான். நீங்கள் தேவனற்று இறந்து போவீர்களானால், நீங்கள் எவ்விதமாக வாழ்ந்திருந்தாலும், எத்தனை கார்கள் நீங்கள் தயாரித்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் உங்களை இழுத்துச் செல்லத் தக்கதாக தேவனுடைய அன்பானது அதில் இல்லாவிட்டால், நீங்கள் இழக்கப்பட்டுவிட்டீர்கள். 66ஒரு நெகடிவ் மற்றும் பாசிடிவ் இருக்கின்றது. இங்கே இருக்கின்ற மின்சாரம் எவ்வளவாக பாசிடிவ் ஆக ஓடினாலும் சரி, அதற்கு பூமியில் ஒரு மின்சாரக் கம்பி இல்லையெனில், அது விளக்கை எரியச் செய்யாது. அது சரி. நீங்கள் தேவனுடைய அன்பில் வேறூன்றி, உறுதியாய் நிலைநாட்டப்பட்டவர்களாயிருக்க வேண்டும். ஓ, சகோதரனே! அந்த நெகடிவ்வையும் பாசிடிவ்வையும் ஒன்றாகக் கொண்டு வா, நீ ஒரு வெளிச்சத்தை, அருமையான பழமை நாகரீக சுவிசேஷ வெளிச்சத்தைப் பெறுவாய். அது தாமே இக்கரையிலிருந்து அக்கரைக்கு பரவட்டும். அதில்லாமல் உன்னால் ஒன்றும் பெற முடியாது. நீ பாசிடிவ்வுடன் எவ்வளவாக ஆட்டுதல், குதித்தல் ஆகியவற்றை கொண்டிருந்தாலும் ஒரு பொருட்டல்ல , நீ விளக்கை பிரகாசிக்கச் செய்ய மின்சாரக், கம்பியை பூமியில் வைத்திருக்க வேண்டும். ஆமென். நீங்கள் கவனித்ததுண்டா? நீங்கள் இதன் மேல் ஒரு நில வயரை வையுங்கள், அதினுடைய ஒவ்வொரு துளியும் நேராக துணை மின் நிலைத்திற்குள் சென்றுவிடும், சரியாக பூமிக்குள் செல்லும். ஆகவே ஒரு மனிதன் ஒவ்வொரு தடவையும் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி, உறுதியாய் நிலை நாட்டப்படும் போது, அது தேவனுடைய இணைப்புக் கம்பம், நங்கூரம் நிலைநாட்டப்பட்ட கல்வாரியில் அவனை வேரூன்றச் செய்து, நிலை நாட்டி வைக்கும். அது சுவிசேஷத்தின் ஒளியை உண்டு பண்ணும். ஆமென். 67காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இங்கே இருக்கின்ற அந்த பெரிய மகத்தான குளிர்ந்து போன பிண அறைகளில் மக்கள் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதைப் போன்று பாவனை செய்கின்றனர். கத்தோலிக்க ஸ்தாபனத்திற்கு அப்பாற்பட்ட, தேசத்தில் இருக்கின்ற மகத்தான ஸ்தாபனங்களில் ஒன்றைச் சார்ந்த ஒரு சிறிய பிரசங்கி நேற்று என்னிடம் வந்தார். அவர், ''சகோதரன் பிரன்ஹாம், நான் மிகவும் வெறுப்படைந்து சோர்வுற்றவனாக இருக்கிறேன், அவர்கள் பிரசங்கிகளாகிய எங்கள் எல்லாரையும் அங்கிகள் அணியச் செய்து எங்கள் கழுத்து பட்டைகளை திருப்பி விட்டு, குறிப்பிட்ட காரியங்களை மாத்திரம் பிரசங்கிக்கும் படிக்குச் செய்யப் போகிறார்கள். ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கு நாங்கள் எதைக் குறித்துப் பேச வேண்டுமென்று அவர்கள் கூறுவார்கள்'' என்றார். அவர் மேலும், “அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் என்ன செய்ய வேண்டும்? நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஆரம்பிக்க வேண்டுமா?,'' என்றார். நான், “சகோதரனே, நீங்கள் அந்த ஸ்தாபனத்துடன் இருக்கும் வரை அதற்கு கனத்தை அளியுங்கள். அவர்கள் என்னவென்பதை அப்படியே கூறுங்கள். ஆனால் உங்களுடைய ஸ்தாபன மதகுரு அல்லது உங்கள் மாநில கண்காணிப்பாளரிடம் சென்று, ”ஐயா, நான் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவன், ஆமென். இதோ தேவனுடைய வார்த்தை. இதை மாத்திரம் நான் பிரசங்கிக்க நீங்கள் அனுமதித்தால், நான் உங்கள் சபையில் இருப்பேன். அப்படி அனுமதிக்கவில்லையெனில், நான் சென்றுவிடுவேன். வேறு யாரையாவது அமர்த்திக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள்“ என்று கூறினேன். அவ்விதமாகத் தான் செய்ய வேண்டும். சுற்றி வளைத்து கூறிக் கொண்டிருக்காதீர்கள். மறுப்பும் தெரிவிக்காதீர்கள். வெளியே வந்து அது என்னவென்று கூறுங்கள். சரி. அவர், ''சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு சபையைக் கொண்டிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?“ என்றார். நான், ''பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்'' என்றேன். அது சரி. அவர்கள் பின் வருவார்கள். 68கோழி குஞ்சுகளை பொரிக்க வைத்த ஒரு மனிதனைப் போன்று. இப்பொழுது, அது ஒரு நகைச்சுவை அல்ல. இதை நகைச் சுவைக்காக கூற வரவில்லை. இதில் கவனிக்க வேண்டிய ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அவன் தன் கோழியை அடைகாக்க வைக்கச் சென்றான், அவனுக்கோ போதுமான முட்டைகள் இல்லை. ஆதலால் ஒரு வாத்தின் முட்டையை அதில் வைத்தான். பிறகு அவையெல்லாம் குஞ்சு பொரித்தன, அந்த வாத்து மற்ற கோழி குஞ்சுகளுக்கு மிகவும் வேடிக்கையான ஒன்றாகக் காணப்பட்டது. அந்த தாய் கோழி தன் குஞ்சுகளை நோக்கி கிளக் என அழைத்தது, அந்த குஞ்சுகள் உடனே ஓடி வரும், ஆனால் அந்த வாத்திற்கோ அந்த பாஷை புரியவில்லை. ஆனால் ஒரு நாள், அந்த தாய்க் கோழி அவைகளை பண்ணைக்கு பின்புறமாக அழைத்துச் சென்றது. அங்கே அந்த பண்ணைக்கு பின்புறத்தில் ஒரு சிறு நீரோடை இருந்தது. அந்த சிறு வாத்தோ அந்த தண்ணீர் வாசனையை கண்டு பிடித்த போது, அதனால் முடிந்த வரை மிக வேகமாக தண்ணீரை நோக்கி ஓடினது. அந்த தாய்க் கோழி, ''கிளக், கிளக், கிளக்“ என்றது. அந்த சிறிய வாத்து, ''ஹாங்க், ஹாங்க், ஹாங்க்” என்றது. அது தண்ணீரை நோக்கி ஓடினது. ஏனெனில், சுபாவத்தின் படி அவன் வாத்தாயிருக்கிறான். அவன் தண்ணீரை முகர்ந்தவுடன், சகோதரனே, அவனால் அதிலிருந்து விலகியிருக்க முடியவில்லை. ஏனெனில், அவன் ஒரு வாத்தாக இருக்கிறான். 69ஆகவே நான் இன்று கூறுகிறேன், உண்மையாக தேவனைக் காண விரும்புகின்ற எந்த மக்களும், அதை அல்லது மற்றதை, மற்றும் தங்களால் ஜீவிக்க முடியாத காரியங்களை சபை தங்களுக்கு கட்டளை இடுவதை அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் தேவனுடைய சுபாவத்தை உங்களில் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் பரிசுத்தத்திற்கு செல்வீர்கள். நீங்கள் சரியான காரியத்திற்கு செல்வீர்கள். சரியான காரியத்தை நீங்கள் செய்வீர்கள். நீங்கள் சரியாக ஜீவிப்பீர்கள். நீ ஒரு வாத்தாயிருந்தால், தண்ணீரை நீ விரும்புவாய். நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்தால், நீ கிறிஸ்துவை விரும்புவாய். நீ ஒரு பிசாசாக இருந்தால், பிசாசின் காரியங்களை நீ விரும்புவாய். நீ ஒரு பருந்தாக இருப்பாயானால், மரித்தவைகளை தின்பாய். நீ ஒரு பன்றியாக இருப்பாயானால், நீ மக்கிய எருவைத் தின்பாய். இன்றைக்கு நீ எங்கே இருக்கிறாய்? சரி. நீ இங்கே இருப்பதாகக் கூறிக் கொண்டு, கர்த்தருடைய காரியங்களை சாப்பிட்டுக் கொண்டு, பிறகு அங்கே சென்று பிசாசுடன் வேரூன்றுகிறாயா? அப்படியானால் அதனுடன் ஏதோ தவறு இருக்கிறது. அந்த ஆவிகளுக்கு செவி கொடுப்பதை விட்டு வெளியேறுங்கள், அவை பிசாசுகள் ஆகும். நீ தனியாக நிற்க நேரிட்டாலும் பரவாயில்லை. ஏறக்குறைய பார்க்கப் போனால் ஆண்களும் பெண்களும் தேவனுடன் தனியாக நின்றவர்களாகத் தான் இருந்தனர். 70மிகாயா அங்கு எப்படி நின்று கொண்டிருந்தான் என்பதை கவனியுங்கள்; ஜிப்ரால்டர் கன்மலையைப் போன்றல்ல, ஆனால் காலங்களின் கன்மலையைப் போன்று. அவன், ''நான் எதையுமே பேசமாட்டேன்... வேதாகம கல்லூரி என்ன கூறினாலும் அது எனக்கு ஒரு பொருட்டல்ல. அவர்கள் என் தலையை வெட்டிப் போட்டாலும், என்ன கூற வேண்டுமென்று என் வாயில் தேவன் எதை வைக்கிறாரோ அதையே நான் கூறுவேன்'' என்றான். அவன் சரியாக இருந்தான். அவன் சரியாக இருந்தான். ஆகவே இன்றைக்கு ஆண்களே, பெண்களே உலகம் உங்களுக்காக வைத்திருப்பதற்கு, அது எவ்வளவு மனப்பூர்வமான மன்றாட்டாக இருந்தாலும் சரி, எவ்விதமான கிருமிநாசினி ஊசியாக அவர்கள் கொண்டிருந்து, ''நீ சபையைச் சேர்ந்தால் எல்லாம் உனக்கு சரியாகிவிடும்'' என்று கூறினாலும் சரி அதற்கு கவனத்தை செலுத்த வேண்டாம். அது ஒரு பொய்யான கிருமி தடை ஊசி மருந்தாகும். ஏன்? உனக்கு இன்னுமாக பாவத்தின் நோயானது இருந்து கொண்டேயிருக்கின்றது. ஆனால் சகோதரனே, உன்னை பாவத்திலிருந்து விடுதலை செய்யும் கிருமி தடைஊசி மருந்தான ஒரு காரியத்தை உனக்கு கூறுகிறேன், அது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்திற்கு வந்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் போது, அது உன்னை உன் பாவத்திற்கு கிருமி தடை ஊசி மருந்தை அளிக்கும், அப்பொழுது உன்னுடைய வாஞ்சைகளெல்லாம் பரலோகத்தைச் சார்ந்ததாகவே இருக்கும், மேலும் உலகத்தின் காரியங்களுக்காக உனக்கு நேரமே இருக்காது. நாம் ஜெபிப்போமா. 71எங்கள் பரலோகப் பிதாவே, இந்த வஞ்சக ஆவிகள் மக்களின் மீது வந்து தேவனுடைய காரியங்களை பயனற்றதாக கருதி வெறுப்பதை நாங்கள் அறிந்திருக்கையில், இவைகளைக் காண்கையில், தேவனே இன்று ஒவ்வொரு மனிதனையும் பெண்ணையும் நீர் தாமே ஆட்கொள்ள வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். அவர்கள் தங்களுடைய ஜீவியமானது வார்த்தையுடன் ஒத்திசைந்து போகவில்லை என்பதை உணர்கின்ற நாளாக இது அமையட்டும் கர்த்தாவே. அவர்கள் தவறான காரியத்திற்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர், அது பிசாசானவன் தானே பழைய பத்திரிகை உண்மை கதைகள், உலகத்தின் பழைய அழுகிப் போன குப்டைக் கூளங்கள், நகரும் படகாட்சிகளும் மற்றும் அசுத்தமான தொலைக்காட்சியுமே. ஓ தேவனே, ஒரு கிறிஸ்தவன் நோக்கி பார்க்கவும் முடியாத இயலாத காரியங்கள்!தேவனே, அது எங்களை குமட்டலுக்குள்ளாக்குகிறது. வாந்தி பண்ணும்படிக்கு அது உம்மை குமட்டலுக்குள்ளாக்குகிறது என்று நீர் கூறினீர். “ஒரு நாயானது தான் கக்கினதை தின்னும்படி திரும்புவது போல, ஒரு - ஒரு பன்றி சேற்றில் புரள திரும்புவது போல'' என்று நீர் கூறியிருக்கிறீர். ஒரு நாயானது எதையாவதை கக்கிவிடும். பாருங்கள். ஒரு அறைகுறையாக பிறந்து, மாய்மாலக்காரனாக கருதப்பட வேண்டிய ஒருவன் பீடத்தண்டை வருவது, நீங்கள் உலகத்தை கக்குவது போல் இருக்கும்; இன்னும் அப்படியே இருத்தல், அவர்கள் திரும்பவுமாக வந்து அதே காரியத்தை மறுபடியும் தின்பர். ஓ தேவனே, உம்முடைய வீட்டை சுத்தம் செய்யும், கர்த்தாவே, அல்லேலூயா! ஒரு மனிதனின் பசியை சுத்தம் செய்கின்ற, அவனுடைய ஆத்துமாவை சுத்தம் செய்கின்ற, அவனை சுத்தம் செய்து இவனை பரலோகம் நோக்கிச் செல்லும் சிருஷ்டியாக மாற்றுகின்ற பழமை நாகரீக உறுதியான நம்பிக்கையுடைய பரிசுத்த ஆவியை அனுப்பும். அவனுக்கு, அவனுடைய வாலவயதையும் பொருத்தனைகளையும் கழுகைப் போல புதிப்பியும், அதினால் அவன் உயர எழும்பி உலகத்தின் காரியங்களை கடந்து, உன்னதங்களில் பறந்து தூரத்தில் வருகின்ற தொல்லைகளை அவன் காண்பானாக. இதை அருளும் கர்த்தாவே. நீர் உம்முடைய தீர்க்கதரிசிகளை கழுகுகளுக்கு ஒப்பிட்டீர், அவர்கள் ஒரு கழுகின் கண்ணை உடையவர்களாக இருந்து, மிக உயரத்தில் சென்று காரியங்கள் அங்கு நடைபெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே அவைகளைக் கண்டனர். ஓ, தேவனே, இந்த சிறிய சபையை ஆசீர்வதியும். இங்கு வருகின்ற இந்த மக்களை ஆசீர்வதியும். இன்று வாசல்களில் இருக்கின்ற வெளியாரையும் ஆசீர்வதியும். இந்த செய்தி தாமே எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் எதிராயிராமல், ஆனால் கர்த்தாவே விசேஷமாக அதிக தேவையுள்ளோருக்கும்; என்றாவது ஒருநாள் நாமெல்லாரும் ஒன்றாக தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நிற்கப் போகிறோம் என்பதை அறிந்தவர்களாக, சத்தியத்தை அறிந்து அதைக் கூறாமல் இருந்தால் அதற்கு நாங்கள் பதலளிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்று அறிந்திருப்பவர்களுக்காக இருக்கட்டும். பிதாவே, அது தாமே ஒவ்வொரு இருதயத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். 72நம்முடைய தலைகள் சற்று தாழ்ந்திருக்யிைல், ''சகோதரன் பிரன்ஹாமே, இந்த சிறிய பழைய காரியங்களைக் குறித்து நான் வேதனையும் வெறுப்பும் அடைந்திருக்கிறேன். என் மீது நீண்ட காலமாக என்னைப் பற்றிக் கொண்டிருக்கின்ற சிறிய கீழ்த்தரமான காரியங்கள் என்னிடம் இருக்கின்றன. நான் - நான் எப்பொழுதுமே முறை தவறிக் கொண்டேயிருக்கிறேன். செய்யக் கூடாத காரியங்களை, அவ்விதம் செய்யக் கூடாது என்று நான் அறிந்தும் அதைச் செய்து கொண்டு தான் இருக்கிறேன். அது ஒரு கிறிஸ்தவனுக்குரிய செயல் அல்ல. அதைச் செய்ய எனக்கு விருப்பமில்லை; அவ்வாறு விருப்பமில்லை என்பதை தேவன் அறிவார். இனிமேலும் நான் பழைய ஆவிக்கு செவி கொடுக்க எனக்கு விருப்பமில்லை. உண்மையான அன்பு மற்றும் கிறிஸ்துவுக்கு சுதந்திரத்தை பெறக் கூடாதபடிக்கு என் வாழ்நாளெல்லாம் என்னை கீழே அழுத்திக் கொண்டிருப்பது அதுவேதான். சகோதரன் பிரன்ஹாமே, அது இந்த நாளில் என்னை விட்டுச் செல்லும் படிக்கு நீர் எனக்காக ஜெபிக்க நான் விரும்புகிறேன்'' என்று இக்காலையில் கூறிக் கொண்டிருக்கிற யாரோ ஒருவர் இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? ஒவ்வொரு தலையும் தாழ்த்தப்பட்டிருக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, என்னே, டஜன் கணக்கான கரங்கள்! சிறிய கீழ்த்தரமான காரியங்கள், சபையில் நீ பேசவோ அல்லது சிறிது குழப்பத்தை விளைவிக்கச் செய்து உன்னை ஒரு பட்சமாக சாரச் செய்து அல்லது அதைப் போன்றவற்றை செய்யக் கூடிய அந்த சிறிய காரியங்கள். ஓ, அது தேவனற்றது. அது சகோதரர் மத்தியில் பிரிவினையாகும். அதை செய்யாதே. அது உனக்குத் தேவையில்லை. அது உனக்குத் தேவையில்லை. 73உன்னை அழுத்திக் கொண்டிருக்கும் அந்த சிறிய காரியங்கள், சிறு சிறு கோபங்கள் மற்றும் எல்லாம் உனக்கு வேண்டியதில்லை. ''தேவனே, இனிமேலும் அது எனக்குத் தேவையில்லை. நான் அதைக் குறித்து வெறுப்பும் வேதனையும் கொண்டுள்ளேன். அதை புறம்பே தள்ள நான் இன்று தயாராக இருக்கிறேன். கர்த்தாவே இப்பொழுது நான் வருகிறேன், என்னுடைய சுயநலம் எல்லாவற்றிலுமிருந்து விட்டுஅகல நான் விரும்புகிறேன். என்னுடைய சகோதரன் என்னை சரியாக பாவிக்கவில்லையென்றாலும் நான் எப்படியாயினும் அவருக்காக ஜெபிப்பேன். என் அப்பா என்னை சரியாக பாவிக்கவில்லையென்றாலும், எதுவாயினும் நான் அவரை நேசிப்பேன். என் மனைவி சரியாக பாவிக்கவில்லையென்றாலும் நான் அவர்களுக்காக ஜெபிப்பேன், நான் தேவனுக்கு முன்பாக தாழ்மையாக இருப்பேன். கர்த்தாவே நான் உம்முடைய ராஜ்யத்தை நோக்கித் தான் பார்க்கிறேன். என் மனம் ஒரே திசையில் செல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என் இருதயம் சந்தோஷத்தினால் நிறைந்திருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தொந்தரவானது என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கையில் நான் செல்ல விரும்புகிறேன், இன்னுமாக என் கைகளை உயர்த்தி உமக்கு முன்பாக என் இருதயம் சுத்தமாக இருக்க நான் விரும்புகிறேன், என்றாவது ஒரு நாளில் நான் உம்மை சந்திக்கப் போகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். இந்த நாளிலிருந்து, அந்த விதமாக என்னை ஆக்கும் கர்த்தாவே, அந்த விதமான அனுபவத்தை பெற நான் விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். சற்று முன்னர் தங்கள் கையை உயர்த்தாத யாராவது உங்கள் கையை உயர்த்துவீர்களா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எங்கள் தலைகளை நாங்கள் தாழ்த்தியிருக்கையில் சகோதரியே ஒரு சிறிய ஸ்ருதியை எங்களுக்கு இசைப்பீரா. அதை எவ்வளவாக நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? இப்பொழுது விளையாடிக் கொண்டிருக்காதீர்கள். இது விளையாடிக் கொண்டிருப்பதற்கான நேரம் அல்ல. இது ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரமாகும். அதை பெற்றுக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிற நேரம் இதுவே. வாருங்கள், சரியாக இப்பொழுது அதை வெளியே கொட்டிவிடுங்கள். அப்படி செய்வீர்களா? வாருங்கள், உங்களிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் தேவனுக்கு அளியுங்கள் ''தேவனே, என்னிடம் அதிகம் இல்லை. நான் ஒரு சாதாரண குடும்பத் தலைவி மாத்திரமே. என்னால் அதிகமாகச் செய்யமுடியாது, கர்த்தாவே ஆனால் என்னால் - என்னால் உம்முடைய வேதாகமத்தை வாசிக்க முடியும். ஒவ்வொரு நாளும் என்னால் ஜெபிக்க முடியும். என் மனதில் இருக்கின்ற எல்லா குப்பையும் என்னால் எடுத்துப் போடமுடியும். அந்த எல்லா காரியத்தையும் புரிந்த குற்ற உணர்வு கொண்டவனாக இருக்கின்றேன், ஆகவே இன்று நான் - நான் அதை வெளியே கொட்டுகிறேன். அது எனக்குத் தேவையில்லை. தேவனே, அன்பால் என்னை நிறைத்தருளும். விரோதியை நான் நேசிக்கச் செய்கின்ற அந்த காரியத்தால் என்னை நிரப்பும். கர்த்தாவே, “உண்மையாகவே அது எனக்கு வேண்டும்'' என்று கூறுங்கள். 74இவர்கள் இங்கே இசைத்துக் கொண்டிருக்கையில், ஜெபத்திற்காக நாங்கள் ஒன்று கூடுகையில், அவர்கள் மத்தியில் இப்பொழுது நீங்கள் வந்து நிற்பீர்களா, அப்படி செய்ய இப்பொழுது எண்ணுகிறீர்களென்றால், அதை விட்டுவிடத் தயாராக நீங்கள் இருப்பீர்களானால் நீங்கள் உத்தமத்துடன் வருவீர்களானால் அதை உங்களுடைய இருதயத்தில் கொண்டிருப்பவர்களாக இந்த பீடத்தை விட்டுச் செல்லமாட்டீர்கள். ''நான் இங்கே நிற்க மாத்திரமே வருகிறேன், ஒரு நிமிடத்திற்கு, சகோதரன் பிரன்ஹாமே, ஆமாம், தனிப்பட்ட விதத்தில் எனக்காக நீங்கள் ஜெபம் ஏறெடுக்கையில்'' என்று கூறுங்கள். நான் - நான் வந்து ஜெபிக்க விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் வருவீர்களா? உங்கள் தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், யார் எழுந்து பீடத்திற்கு வந்து, பீடத்தை சுற்றிலும் நிற்க விரும்புகிறார்கள்? ஓ, மிருதுவான இரட்சகரே, என்னைக் கடந்து சென்றுவிடாதேயும் என் தாழ்மையான கூக்குரலைக் கேட்டருளும் மற்றவர்களை நீர் சந்திக்கும் போது ஓ, என்னைக் கடந்து சென்று விடாதேயும் இரட்சகரே, இரட்சகரே என் தாழ்மையான கூக்குரலைக் கேட்டருளும் மற்றவர்களை நீர் சந்திக்கும் போது ஓ என்னைக் கடந்து சென்று விடாதேயும். 75நீ எவ்வளவு காலமாக கிறிஸ்தவனாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, இன்னுமாக அந்த பழைய ஆவிகள் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கவிடுகிறாய். அது உன்னை ஒரு கட்டுக்குள் இல்லாமல் அங்குமிங்கும் அலையும் படிக்குச் செய்யும், யாராவது ஒருவரைக் குறித்து நீ பேசச் செய்யும். யாராவது ஒருவர் வந்து வேறொருவரைக் குறித்து பேசும் போது, நீயும் போய் அவர்களுடன் சேர்ந்துக் கொள்கிறாய், ஓ, அவர்களைக் குறித்து அவதூறு பேசுகிறாய். அது தவறு, சகோதரனே. அதைச் செய்யாதே. அது கடைசியாக உன்னை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்லாதபடிக்குச் செய்துவிடும். உன்னிடம் இருக்கக் கூடாத அந்த பழைய காரியங்களை இன்னுமாக நீ கொண்டிருப்பாயானால், தேவனுடைய அன்பானது உண்மையாகவே உன்னுடைய இருதயத்தில் இல்லாதிருந்தால், ஸ்திரீயே, மனிதனே, நீ எழுந்து நடந்து, “தேவனே, சரியாக இந்த இடத்திலேயே இக்காலையில் சரியாக இங்கேயே அதை வெளியே கொட்டிவிடுகிறேன். இந்த பீடத்திலிருந்து நான் ஒரு வித்தியாசமான நபராகச் செல்வேன்” என்று நீ கூறுவாயா. நீ வருவாயா? 76இயேசுவை ஏற்றுக் கொள்ளாதிருக்கிற பாவி யாராவது இங்கு உள்ளனரா, மேலும் நீ ஒரு பாவி என்று அறிந்து, உன்னுடைய இரட்சகராக அவரை அறியாதிருக்கிறாயா? ''சகோதரன் பிரன்ஹாம், ஆம், எனக்கு நிறைய இன்பம் இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். நான் நடனங்களுக்கு, விருந்துகளுக்கு மற்றும் அந்த எல்லா காரியங்களுக்கும் செல்கிறேன். நான் தவறான தன்மையுள்ள காட்சிகளை காண்கிறேன். நான் - நான் எழுதப்பட்டிருக்கின்ற தவறான ஏடுகளை வாசிப்பேன். இழிவான அசுத்தமான கதைகள் அடங்கிய புத்தகங்களை வாசிப்பேன். அதை வாசிப்பதில் நான் இன்பம் கொள்கிறேன்'' என்று கூறுகிறாய். சகோதரனே, உன்னிடம் ஏதோ தவறு இருக்கின்றது. அது தான் உன்னுடைய பசியாகும்; பாருங்கள், ஒரு மனிதன் எதை வாசிக்கின்றான் என்பதை நான் காணட்டும், எதைப் பார்க்கிறான் என்றும் எந்தவிதமான இசையை கேட்கிறான் என்று நான் பார்க்கட்டும். அன்றொரு நாள், நான் காரில் வந்து கொண்டிருந்த போது, ஒரு குறிப்பிட்ட நபர் தன் கையை நீட்டி என்னுடைய வானொலியை, ஏதோ ஒருவிதமான இழிவான அசுத்தமான இசையை போட்டார். நான் அதை நிறுத்து. அதை கேட்க எனக்கு விருப்பமில்லை என்றேன். ஏதோ விதமான பூகி - வூகி இசை (boogie - woogie). அவர், “என்ன? நான் அதைக் கேட்க விரும்புகிறேன்” என்றார். நான், “உன்னுடைய சுபாவம் தவறானது. எனவே நீ தவறாக இருக்கிறாய்”. 77அதற்கு பிறகு சில நாள் கழித்து நான் அங்கே வெளியில் சென்றிருந்த போது, அங்கே மேலே மலையோரத்தில் அல்லது குன்றின் ஓரத்தில் அந்த நபருடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த சிறு பறவைகள் பாடிக் கொண்டிருந்தன. வானம்பாடிகள் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தன. அந்த குதிரையின் வார் (Matingale) இல்லை. சிறு இன்னிசைப் பறவையானது (Nightingale) மேலே ஆகாயத்தில் பறந்து துதிகளை பாடிக் கொண்டிருந்தது. நான் பையனை நோக்கி கூக்குரலிட்டேன், ''இங்கே பார் பையனே, அதுதான் எனக்கு பிடித்த இசை. அதை அப்படியே இயக்கு. அது தான் என்னுடைய வானொலி . நான் இங்கே இருக்கையில் என்னை நோக்கி பாடத் தக்கதாக தேவன் அவைகளை அனுப்புகிறார். அது என் ஆத்துமாவை மகிழ்வித்து தட்டிக் கொடுக்கின்றது என்று கூறினேன். அந்த எல்லா பழைய பைத்தியக்காரத்தனமான பாடல்களைக் காட்டிலும் மேலானது, ஒரு நாணயத்தை சொருகினால் குறிப்பிட்ட இசைத்தட்டுகளை தானாக இயக்கி பாட வைக்கும் இயந்திரங்கள் (Juke box) அதிக சத்தம் போடுகிறது, நீங்கள் ஒரு பொது இடத்தில் உணவு கூட அருந்த முடியாத அளவிற்கு அதிக சத்தமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அது பிசாசின் உணவுப் பட்டியலாகும். பாசத்தால் கலக்கப்பட்ட பிசாசின் குவியலாகும். நீங்கள் எல்லாரும் அதை ரசிக்கிறீர்களா? அந்த இயந்திரங்களில் நாணயத்தை, காசை அவர்கள் போடுகையில் இந்த எல்லா பழைய அசுத்தமான பாடல்களும் அதில் வரும், நீ அதில் இன்பம் கொள்கின்றாயா? வெட்கக்கேடு. நீ ஒரு பின்மாற்றக்காரனாயிருக்கிறாய். நீ தேவனிடமிருந்து புறம்பாக இருக்கின்றாய். நீ தேவனை அறியாதிருக்கிறாய். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நீ தேவனை அறிந்திருப்பாயானால், அதைப் போன்ற ஒரு முட்டாள்தனமானவைகளை நீ காதால் கேட்கமாட்டாய். அது உனக்கு மரித்துப் போன ஒன்றாயிருக்கும். நீ - நீ வாந்தி பண்ணப்பட்டதிலிருந்து விலகுவதைப் போல அதிலிருந்து அப்புறம் செல்வாய். உனக்கு அது பிடிக்காது. உன்னுடைய ஆகாரமானது மேலானது. நீ தேவனை நேசிக்கிறாய். இக்காலையில் நீ இங்கே வந்து இந்த அறிக்கையிடும் மக்களோடு முழங்காலிடுவாயா? 78அநேக வருடங்களாக கிறிஸ்தவர்களாக இருக்கின்ற மனிதரும் பெண்களும் இங்கே முழங்காலிட்டிருக்கின்றனர். நான் இவர்களை கிறிஸ்தவத்திலிருந்து மாற்றிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நான் செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பது என்னவெனில் அவர்களை சுற்றி சுற்றி வட்டமிடுகின்ற பேய், அந்த பிசாசு, அந்த முழுமையான சந்தோஷத்தினின்று இவர்களை புறம்பாக வெளியே வைத்திருக்கின்றது. அந்த சந்தோஷம் பரிசுத்த ஆவியாகும். ஆம், நான் குடித்தவனாக எழுந்து கொள்கிறேன், குடித்தவனாக படுக்கைக்குச் செல்கிறேன், பகல் முழுவதுமாக நான் குடித்தவனாக இருக்கிறேன், இரவு முழுவதுமாக நான் குடித்தவனாக இருக்கிறேன். ஓ, நான் - நான் அப்படியே நேசிக்கிறேன். நான், “ஓ, மிருதுவான இரட்சகரே என்னைக் கடந்து சென்றுவிடாதேயும். என் தாழ்மையான கூக்குரலைக் கேட்டருளும்'' என்று பாடிக் கொண்டே மீன் பிடித்துக் கொண்டிருப்பேன். நான் வேட்டைக்குச் செல்கையில் தேவனுடைய துதிகளை பாடிக் கொண்டேயிருப்பேன். நான் செல்லும் எவ்விடங்களிலும் நான் பிரசங்கிக்கிறேன். அந்த விதமாக இருப்பதற்கு உங்களுக்கு விருப்பமுண்டா? முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிறைந்திருப்பது, அது உன்னை ஊக்குவிக்கும். ஓ, என்னே! அந்த அசுத்தமான பாடல்களையா கேட்கிறீர்கள்? நீங்கள் இவ்விமாக பாடலாம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன் ஓ யார் என்னோடே கூட வருகிறீர்கள்? வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன், ஓ யார் என்னோடே கூட வருகிறீர்கள்? வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன். ஆசீர்வதிக்கப்பட்ட இளைப்பாறுதலை நான் சென்றடைந்து, என்றென்றுமாக ஆசீர்வதிக்கப்பட்டிருப்பேன், எப்பொழுது நான் என் பிதாவின் முகத்தைப் பார்ப்பேன், அவருடைய மார்பில் இளைப்பாறுவேன் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன்; ஓ யார் என்னோடே கூட வருகிறீர்கள்? வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு நான் போகப் புறப்பட்டேன். 79நீயும் வந்து புறப்படலாமல்லவா? நாங்கள் சுமார் ஐந்நூறு பேர்களாக நின்று கொண்டிருக்கையில் இதே சமயத்தில் அந்த வருடத்தில் நதிக் கரையோரத்தில் நான் நூற்று இருபதாவது நபருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த மகத்தான விடிவெள்ளி நட்சத்திரம் நதியின் மீது பிரகாசித்துக் கொண்டே கீழே வந்ததை நான் நினைவு கூறுகிறேன். அல்லேலூயா! அதிலிருந்து உரைத்த ஒரு சத்தம் “ஒரு நாளிலே நீ சுவிசேஷத்தை உலகம் முழுவதும் பரப்புவாய்'' என்று கூறினது. எப்படி ஒரு ஏழை சிறிய அறியாமையுடைய பண்ணை சிறுவனால் அதை செய்ய முடியும்? தேவனுடைய கிருபை ஆமென். ஓ, யார் வந்து புறப்படப் போகின்றார்கள்? ஒவ்வொரு பாரத்தையும் இப்பொழுது வீசி எறிந்து, புறம்பாகப் போடுங்கள். அந்த வஞ்சக ஆவிகளுக்கு செவி கொடுக்காதீர்கள். கர்த்தர் உரைக்கிறதாவது, வாருங்கள், தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுங்கள். நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். (ஆங்கிலத்தில் 'அவர்கள் நிரப்படுவார்கள்' என்றுள்ளது.) 80பீடத்தண்டையுள்ள இவர்களோடு நாம் ஜெபிக்கையில் இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. அருமையான பிள்ளைகளே, இக்காலை நீங்கள் இந்த பாரத்தை புறம்பே வைப்பதற்காகவே இங்கே இருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைவில் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்களை எளிதில் தொந்தரவு செய்கின்ற அந்த ஒவ்வொரு பாவத்தையும், பாரத்தையும் நீங்கள் தள்ளிவிட வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். எபிரெயர் 12-ஆம் அதிகாரத்தில் பவுல் கூறினான். ...மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க பாரமான யாவற்றையும் நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும்... பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக் - காராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும் குறித்து நான் விவரஞ் சொல்ல வேண்டுமானால் காலம் போதாது. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள் , நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தத்தை பெற்றார்கள் சிங்கத்தின் வாயை அடைத்தார்கள். அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக் கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், எதிரியை முறியடித்தார்கள்... ஸ்திரீகள் சாகக் கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்... வேறு சிலர் சித்தரவதையும், நிந்தைகளையும் அடிகளையும் அதற்கும் மேலாக கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள். வேறு சிலர் விசாரணைகளையும்... நிந்தையையும் அடியையும்... இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற் போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். 81இயேசு, தம்முடைய ஜெபத்தில் “பிதாவே நான் என்னைத் தானே பரிசுத்தமாக்குகிறேன்'' என்று கூறினார். சபைக்கு இயேசு பரிசுத்தமாக்கப்பட்டார். அவர் விவாகம் செய்து கொண்டிருக்கலாம், ஆனால் அவரோ அவ்வாறு செய்யவேயில்லை. அவர் பரிசுத்தமானார். அவர் ''பிதாவே, சத்தியத்தின் மூலமாக அவர்களை பரிசுத்தப்படுத்தும்'' என்று கூறினார். இப்பொழுது, பாரமான யாவற்றையும் தள்ளிவிடுவோம். உங்களுக்கு கோபம் இருக்கிறதா, நீங்கள் பேசக்கூடாது என்றிருக்கையில் உங்களை பேசும்படி செய்கிறதா? ஓ தேவனே, இப்பொழுது அதை அங்கே வைத்துவிடுங்கள். அதை அங்கே வைத்து, பீடத்தின் அக்கினியானது கீழே வந்து அதை எடுத்துப் போடுவதை கவனியுங்கள். தேவனுடைய அன்பானது அதை நக்கிப் போடுவதை கவனியுங்கள், நீ உன்னுடைய மனைவியுடன் பேசுகின்ற முறை, உன்னுடைய கணவருடன் நீ பேசுகின்ற முறை, உன்னுடைய அண்டை வீட்டாருடன் நீ பேசுகின்ற முறை, சபையில் நீ மக்களைக் குறித்து பேசின காரியம், இக்காலை வேளையில் அதை பீடத்தின் மீது வை, தேவனுடைய அக்கினியானது கீழே வந்து அதை எடுத்து போட்டுவிடும், அந்த இடத்தில் தெய்வீக அன்பானது எரிந்து கொண்டிருக்கும். உனக்கு வியாதி இருக்கிறதா? அதை பீடத்தின் மீது வைத்து, ''கர்த்தாவே, இதோ அது. எனக்குள் ஒரு சுத்த ஆவியை உண்டு பண்ணும். எனக்குள் சுகமாக்கும் வல்லமையை உருவாக்கும்'' என்று கூறு. தேவன் என்ன செய்யப் போகின்றார் என்று பார். தேவன் அதை இக்காலையில் செய்வார். 82எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய பிரசன்னத்தில், பீடத்தண்டை உள்ளவர்களின் சார்பில் நாங்கள் தலை வணங்குகிறோம். பிதாவே, இவர்கள் ஒவ்வொருவர் மீதும் உம்முடைய கிருபையானது தங்குவதாக. இப்பொழுது இவர்கள்... கர்த்தாவே இவர்களுக்காக என்னால் அதைச் செய்ய முடியாது. தங்களுக்கு தாங்களே இவர்கள் செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்காக எந்த ஒரு மனிதனாலும் செய்ய முடியாது. இவர்கள் ஆத்துமாக்கள் இவர்களுக்குள்ளாகவே இப்பொழுது “ஓ, தேவனே, இந்த கோபம், இதை நான் இங்கே வைக்கிறேன், கர்த்தாவே என்ன வந்தாலும் போனாலும் சரி, இதை நான் திரும்பவும் எடுக்க மாட்டேன். இப்பொழுதிலிருந்து இதை நான் விரட்டிவிடுகிறேன். ஒருவரைக் குறித்து தேவையற்றதை பேசுவோரிடம் சுலபமாக சேர்ந்து கொண்டு பேசின இந்த என்னுடைய நாக்கு, கர்த்தாவே அதை இங்கே வைத்துவிடுகிறேன். இதை நான் மறுபடியுமாக எடுக்கமாட்டேன். கர்த்தாவே, என்னுடைய நாக்கை பரிசுத்தபடுத்தும். ஏசாயா 'ஐயோ! நான் அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ளவன்' என்று செய்தது போல தூதர்கள் வருவதை நான் உணரச் செய்யும். அந்த தூதன் வந்து, குறட்டை எடுத்துக் கொண்டு பீடத்திற்கு சென்று நெருப்புத் தழலை எடுத்து, அவனுடைய வாயை தொட்டு அவனைப் பரிசுத்தப்படுத்தினான். தேவனே, தவறானதை பேசி பிரிவினையை விதைக்கின்ற ஒவ்வொருவரையும் பரிசுத்தப்படுத்தும். கர்த்தாவே, அதை அருளும்“. 83இந்த கட்டிடத்தில் தலை வணங்கியுள்ள எல்லா வியாதியும், அவையும் பிசாசுதான் என்று வியாதியுள்ள மக்கள் அறிந்திருக்கின்றனர். தேவனே, உம்முடைய ஊழியக்காரனாக அவைகளை இயேசுவின் நாமத்தில் கடிந்து கொள்கிறேன். ஒவ்வொரு வியாதியுள்ள மக்களிடமிருந்து அவை வெளியே வருவதாக. அசுத்தமான சிந்தனைகள், கீழ்த்தரமானவைகள், இச்சைகள் நிறைந்த ஒவ்வொரு அசுத்தமுள்ள நபரும், ஆண்களும், பெண்களும், தேவனே, அதை அவர்களிடமிருந்து வெளியே எடுத்துப் போடும். சிகரெட்டுகளை, சமுதாய மது விருந்துகளை, சிறு விருந்துகளை, தன்னலம் கொண்ட காரியங்களை தங்களிடமிருந்து எடுத்துப் போட முயல்கின்ற இங்கேயுள்ள எல்லாரும்; தேவனே, இனிமேலும் அந்த காரியங்களின் மேல் இவர்களுடைய விருப்பமானது செல்லாதிருக்கின்ற விதத்தில் தாமே பரிசுத்த ஆவியானவர் தாமே இவர்களுடைய இருதயத்தை ஊக்குவிக்கட்டும். இப்பொழுதிலிருந்து நீங்கள் தாமே பரிசுத்த ஆவியால் மிகவுமாக நிறைந்திருக்கிறபடியால் அதற்கு இனியும் இடம் கிடையாது. தேவனே, இந்த சிறு சபையை எரிகின்ற முற்புதராக மாற்றும். பரிசுத்த ஆவியின் இடம் தாமே இதை ஒரு எரிகின்ற அக்கினியாக செய்து, உலகமானது திரும்பி தேவனுடைய மகிமையை காணத் தக்கதாகச் செய்யும். தேவனே, இக்காலையில் இந்த சிறிய மக்களைக் கொண்டு, சுமார் இருநூறு மக்களைக் கொண்டு ஆரம்பியும். இதை அருளும், கர்த்தாவே. ஒவ்வொரு மெத்தொடிஸ்ட், ஒவ்வொரு பாப்டிஸ்ட், ஒவ்வொரு கத்தோலிக்க, ஒவ்வொரு பிரஸ்பிடேரிய, ஒவ்வொரு பெந்தெகொஸ்தேயினர், எல்லா இருதயத்தையும் சுத்தப்படுத்தும். கர்த்தாவே, அதை அவர்களுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடும், இவர்கள் தாமே இன்றைக்கு உம்மண்டை வரட்டும். பிதாவே, இதை அருளும். இவர்களை நாம் உம்மிடம் பரிந்துரைத்து, அவர்களுடைய ஆத்துமாக்கள் சுத்தமடைந்து தங்கள் சரீர , சுகத்திற்காக இயேசுவின் நாமத்தில் அவர்களை நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 84உங்கள் பாரத்தை பீடத்தண்டை விட்டுவிட்டீர்களா? அது அங்கே கிடக்கின்றது என்று நீங்கள் உணர்கிறீர்களா? அது அங்கே இருக்கின்றது என்று நீங்கள் உணர்வீர்களானால், நீங்கள் தாமே நியாயத்தை தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஜெபித்துக் கொண் டிருந்தது நீங்கள் தான். நான் பிரசங்கத்தைச் செய்தேன். நீங்கள் ஜெபித்தீர்கள். சகோதரனே, சகோதரியே உங்கள் பாரம் அங்கே விடப்பட்டிருக்கிறதா? உண்மையாகவே நீங்கள் அதை அங்கே விட்டுவிடுகிறீர்களா? உங்களால் கூடுமானால், உங்கள் கரங்களையுயர்த்தி, “ஆம், தேவனே, இப்பொழுது நான் இதை இங்கே விட்டு விடுகிறேன். என்னுடைய வேற்றுமை, நான் இதை இங்கே பீடத்தண்டை விட்டுவிடுகிறேன்'' என்று கூறுங்கள். அதைக் குறித்தென்ன, இங்கே பீடத்தின் கடைசியில் என் வலது பக்கத்தில் இருக்கிற ஸ்திரீயே? அதை அங்கே விட்டுவிடுவாயா? அந்த பழைய பாரத்தை அங்கே நீ விட்டுவிடுவாயா? ”என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே“ என்று கூறுங்கள். நாமெல்லாரும் இப்பொழுது அதை ஒன்றாகப் பாடுகையில், என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக் குட்டியே ஓ தெய்வீக இரட்சகரே நான் ஜெபிக்கும் போது செவிகொடும் என் பாவம் அனைத்தும் போக்கியருளும் ஓ, இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாயிருக்கச் செய்யும் 85நாம் எழுந்து நிற்போமாக, ஒவ்வொருவரும், மிக பயபக்தியுடன். இப்பொழுது ஒவ்வொருவரும் உன்னிப்பாக இப்பொழுது கவனியுங்கள். யாரும் செல்ல வேண்டாம். அப்படியே... ஆராதனை இன்னும் முடியவில்லை. இந்த சிறிய புனிதமான, பக்தியானதை நீங்கள் உணர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வாழ்க்கையின் இருளின் பாதையில் நடந்து, துன்பம் என்னை சூழும் போது, என் வழிகாட்டியாயிரும், இருள் பகலாக மாற கட்டளையிடும், துயரத்தின் பயங்களை போக்கியருளும், ஓ, இன்று முதல் நான் முழுவதும், உம்முடையவனாகச் செய்யும்! உன்னுடைய அயலானுக்கு இப்பொழுது அதைப் பாடாதே. உன்னுடைய கண்களை மூடி, நாம் நம்முடைய கரங்களை தேவனை நோக்கி உயர்த்துகையில் மெதுவாகப் பாடுவோமாக. வாழ்க்கையின் இருளின் பாதையில் நடந்து, துன்பம் என்னை சூழும் போது, என் வழிகாட்டியாயிரும், இருள் பகலாக மாற கட்டளையிடும், துயரத்தின் பயங்களை போக்கியருளும், ஓ, இன்று முதல் நான் முழுவதும், உம்முடையவனாகச் செய்யும் அங்கே எனக்கொரு பிதா இருக்கிறார், அங்கே எனக்கொரு பிதா இருக்கிறார், மறுகரையிலே. ஓ, அந்த பிரகாசமான நாள் நாளையாக இருக்கலாம், அந்த பிரகாசமான நாள் நாளையாக இருக்கலாம், அந்த பிரகாசமான நாள் நாளையாக இருக்கலாம், மறுகரையிலே. 86மறு தேசத்திலே எத்தனைப் பேர் ஒரு தந்தையை கொண்டிருக்கக் கூடும்? உங்களுடைய கரத்தை நான் காணட்டும். மறு தேசத்திலே எத்தனை பேர் ஒரு தாயை கொண்டிருக்கக் கூடும்? உங்களுடைய கரத்தை நான் காணட்டும். எத்தனை பேர் மறு தேசத்திலே ஒரு இரட்சகரைக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை நான் காணட்டும். அது ஒரு மகிழ்ச்சிகரமான சந்திப்பாயிருக்குமே! அது ஒரு மகிழ்ச்சிகரமான சந்திப்பாயிருக்குமே! அது ஒரு மகிழ்ச்சிகரமான சந்திப்பாயிருக்குமே! மறுகரையிலே. நீங்கள் ஒன்றை செய்ய நான் விரும்புகிறேன். இப்பொழுது நாம் மறுபடியுமாக பாடுகையில், உங்கள் பக்கத்திலுள்ளவரிடம் நீங்கள் கைகுலுக்கி “சகோதரனே, சகோதரியே நான் உங்களை மறுதேசத்திலே சந்திக்க வேண்டுமென்று எனக்காக ஜெபியுங்கள்'' என்று கூற நான் விரும்புகிறேன். அதை உண்மையாக புரிந்து கொண்டு செய்யுங்கள். இல்லையென்றால் செய்யாதீர்கள். எத்தனைப் பேர் ஒருவரையொருவர் சந்திக்க விரும்புகிறீர்கள்? இங்கேயுள்ள ஒவ்வொருவரையும் அங்கே சந்திக்க வேண்டுமென்று எத்தனைப் பேர் விரும்புகிறீர்கள்? நிச்சயமாக நாம் விரும்புகிறோம். இப்பொழுது ஒருவரையொருவர் கைகளைக் குலுக்கி ”சகோதரனே, நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். மறுகரையில் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். இப்பொழுது நாம் இதை “அங்கே எனக்கொரு இரட்சகர் உண்டு” என்று பாடுகையில். சரி. அங்கே எனக்கொரு இரட்சகர் உண்டு, அங்கே எனக்கொரு இரட்சகர் உண்டு, அங்கே எனக்கொரு இரட்சகர் உண்டு, மறுகரையிலே. ஓ, ஒரு பிரகாசமான நாளில் நான் சென்று அவரை காண்பேன், ஓ, ஒரு பிரகாசமான நாளில் நான் சென்று அவரை காண்பேன், ஓ, ஒரு பிரகாசமான நாளில் நான் சென்று அவரை காண்பேன், மறுகரையிலே. அது உங்களை நலமான, அருமையாக உணரச் செய்யவில்லையா? இயேசுவே சிலுவையண்டை என்னை வைத்துக் கொள்ளும் இயேசுவே... அருகில் என்னை வைத்துக் கொள்ளும், அங்கு விலையேறப் பெற்ற ஊற்று உள்ளது, எல்லாருக்கும் இலவசம், சுகமளிக்கும் அருவி, கல்வாரியிலிருந்து பாய்கிறது எல்லோரும் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சிலுவையில், சிலுவையில், என் மகிமை எப்பொழுதும் இருக்கட்டும், பரவசமடைந்துள்ள என் ஆத்துமா, நதிக்கப்பால் இளைப்பாறுதல் பெறும் வரையில். சிலுவையில், சிலுவையில், என் மகிமை எப்பொழுதும் இருக்கட்டும், பரவசமடைந்துள்ள என் ஆத்துமா, நதிக்கப்பால் இளைப்பாறுதல் பெறும் வரையில். நேசிக்கிறேன், நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில், தேவனுக்கு ஸ்தோத்திரம்! 87இப்பொழுது நாம் அமைதியரக சற்று நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். நம்முடைய சொந்த அருமையான வழியிலே, நம்முடைய கரங்களை உயர்த்தி அவரைத் துதிப்போம், ''உனக்கு நன்றி கர்த்தாவே, என் ஆத்துமாவை இரட்சித்ததற்காக, நீர் செய்த எல்லாவற்றிற்காகவும் இனிமையான இரட்சிப்பை கொண்டு வந்ததற்காகவும், இலவசமான இரட்சிப்பை கொண்டு வந்ததற்காகவும் உமக்கு நன்றி கர்த்தாவே உமக்கு நன்றி கர்த்தாவே'' என்று கூறுங்கள். உமக்கு நாங்கள் ஸ்தோத்திர பலி செலுத்துகிறோம். நீர் மிகவும் அருமையானவராக இருப்பதற்காக உம்மை நாங்கள் ஸ்தோத்தரிக்கிறோம். நீர் தான் பள்ளத்தாக்கின் லீலி, விடிவெள்ளி நட்சத்திரம், சாரோனின் ரோஜா, எல்லாவற்றிற்கும் எல்லாம். நீர் தான் பிதா, அந்த குமாரன், அந்த பரிசுத்த ஆவி; இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர்; அந்த மகத்தான அல்பா, ஓமெகா, நீர் தான் அற்புதமானவர், சமாதானப் பிரபு, தாவீதின் வேரும் சந்ததியுமானவர். எல்லாம் நீர்தான். நீர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் கர்த்தாவே, உம்முடைய வார்த்தைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம், ஏனென்றால் அது எங்களுடைய பாதைக்கு ஒளியாயிருக்கிறது. ஓ, நீர் தாமே எங்களை ஒளியில் நடக்கச் செய்வீரென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே இதை அருளும்,பிதாவே. இயேசுவின் நாமத்தில். ஆமென். சரி. நாம் ஒரு நிமிடம் அமர்ந்திருக்கையில், ''நாம் ஒளியில் நடப்போம்'' நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும், இயேசுவே... ஒளியே. பாடுங்கள், பரிசுத்தவான்களே, இப்பொழுது நாம் பாடுவோம்! நாம் ஒளியில் நடப்போம்,(சுத்தம், பரிசுத்தம்) அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும், இயேசுவே... ஒளியே, வாருங்கள், அவரை உங்களுடைய ராஜாவென்று அறிக்கையிடுங்கள், இயேசுவே, உலகத்தின் ஒளி; அப்பொழுது பரலோகத்தின் மணிகள் ஒலிக்கும், இயேசுவே, உலகத்தின் ஒளி. எல்லாருமாக! நாம் ஒளியில் நடப்போம், (ஜெபத்தில் நடப்போம்) அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும், இயேசுவே... ஒளியே. 88இது உங்களை அருமையாக உணரச் செய்யவில்லையா? எத்தனை பேர் அருமையாக உணர்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி, ''நான் உண்மையாகவே நலமாக உணர்கிறேன்'' என்று கூறுங்கள். பரிசுத்த ஆவி உங்களை முழுவதுமாக தூய்மையாக்குகிறது. பிறகு நாம் (என்ன?) ஒளியில் நடப்போம். எதற்கும் செவி கொடாதீர்கள்... ஒளி என்றால் என்ன? “உம்முடைய வார்த்தை தீபமாயிருக்கிறது'' அப்படியானால், நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும், இயேசுவே... ஓளி. இப்பொழுது அற்புதமானதல்லவா? நம்மால் முடிக்க இயலாது என்பது போல் தோன்றுகிறது. பரிசுத்த ஆவி நம்மை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது! அந்த விதமாக உங்களால் உணர முடிகிறதா? என்னால் முடிக்க இயலாதவன் போல் உணர்கிறேன் முடியாது போல தோன்றுகிறது. ...சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக் கொண்டிருக்கிறது, சந்தியத்திற்காய் மரித்த சீஷர்களின் இரத்தம் அது, பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த பரிசுத்த ஆவியின் திட்டத்திற்காய் உயிர் நீத்த முதலாமவர், யோவான் ஸ்நானன் தான், ஆனால் அவர் ஒரு மனிதனைப் போல் மரித்தார், பின்பு கர்த்தராகிய இயேசு வந்தார், அவரை சிலுவையிலறைந்தனர், ஆவியானவர் மனிதனை பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அவர் போதித்தார், அங்கே பேதுருவும், பவுலும் திவ்விய வாசகனாகிய யோவானும் இருந்தனர், இந்த சுவிசேஷம் பிரகாசிப்பதற்காக அவர் தம் உயிரைத் துறந்தனர், பண்டைய தீர்க்கதரிசிகளின் இரத்தத்தோடு தங்கள் இரத்தத்தையும் இவர்கள் கலந்தனர். அதினால் உண்மையான தேவனுடைய வார்த்தையை உத்தமமாக உரைக்க முடிந்தது. அவர்கள் ஸ்தேவானைக் கல்லெறிந்தனர், அவன் பாவத்திற்கெதிராக பிரசங்கித்தான், அவன் அவர்களை மிகவும் கோபத்துக்குள்ளாக்கினான், அவனுடைய தலையை அவர்கள் மோதினார்கள், ஆனால் அவன் ஆவிக்குள்ளாக மரித்தான், தன்னுடைய ஜீவனைவிட்டான், மற்றவர்களோடு சேர்ந்து கொள்ள அவன் சென்றான். ஜீவனை அளிக்கும் கூட்டம். அது இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது, ஆம், அது இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது, பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக் கொண்டு இருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் அது, இந்த பரிசுத்த ஆவிசுவிசேஷம் இரத்தம் சொட்டிக் கொண்டேயிருக்கிறது. கவனியுங்கள்! பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் “எதுவரைக்கும்? என்று கதறினர், தீங்கிழைத்தவர்களை கர்த்தர் தண்டிப்பதற்காக, ஆனால் இன்னும் அநேகர் தங்கள் ஜீவனின் இரத்தத்தைக் கொடுக்கவிருக்கின்றனர், இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷமும் அதனுடைய சிவப்பு நிற வெள்ளத்துக்கும், அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, அல்லேலூயா, அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக் கொண்டு இருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் அது, இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக் கொண்டிருக்கிறது. 89பிரசங்க பீடத்திலிருந்து நேராக நான் செல்ல விரும்புகிறேன். ஆமென், ஓ, எவ்வளவு அற்புதமானது. என் சகோதரர் தங்கள் ஜீவனின் இரத்தத்தை அளித்தனர். அதே காரியத்தை செய்யப் போகின்ற அநேகம் பேர் இருக்கப் போகின்றனர். கவலைப்படாதீர்கள். கூடிய சீக்கிரத்தில் அது ஒரு பலப்பரீட்சைக்கு வரப் போகிறது. நீங்கள் ஒன்று உள்ளே அல்லது வெளியே செல்வீர்கள். அவர்கள் எல்லோரும் சபைகள் ஐக்கியத்திற்குள் இப்பொழுது இணைந்து கொண்டிருக்கின்றனர், எல்லாம் உள்ளே செல்கின்றது. அவர்களெல்லாரும் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் அநேகர் தங்கள் ஜீவனின் இரத்தத்தை கொடுக்க விருக்கின்றனர். இந்த பரிசுத்த சுவிசேஷத்திற்காகவும் அதின் ஜீவநதிக்காகவும் அது இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆம் அதில் சொட்டிக் கொண்டிருக்கிறது. (ஓ, அல்லேலூயா) இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக் கொண்டு இருக்கிறது, சத்தியத்திற்காக மரித்த சீஷர்களின் இரத்தம் அது, இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷம் தொடர்ந்து இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது. 90என்னே! எடுத்துப் கொள்ளப்படுதல் சபைக்கு மேல் இருப்பது போல் நான் உணர்கிறேன். ஓ, அது என்னை மிகவும் அருமையாக உணரச் செய்கிறது. எல்லா பாவங்களும் இரத்தத்தின் கீழே இருக்கிறது. பாருங்கள், பரிசுத்த ஆவி வார்த்தையை விரும்புகிறது. வார்த்தை தான் பரிசுத்த ஆவியானவர் உட்கொள்வதாகும், பாருங்கள். ஓ, என்னே! அது கீழே வந்து மக்களின் மத்தியில் சென்று, அவர்களுடைய பாவங்களை கழுவி, அவர்களுடைய வார்த்தையை எடுத்துப் போட்டு, அவர்களுடைய தொல்லைகளெல்லாம் எடுத்துப் போடும். இப்பொழுது நான் குடித்திருக்கிறேன், எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடித்திருக்கிறேன், ஆவியில் குடித்திருக்கிறேன், என்னுடைய இருதயத்திலிருந்து அன்பானது அதை வெளியே கொணர்கிறது. யார் என்ன செய்திருந்த போதிலும், அது மன்னிக்கப்பட்டுவிட்டது. உன்னுடைய தீவிர விரோதி, அது எல்லாம் முடிந்துவிட்டது. யாராவது ஒருவர் எதையாவது பேசியிருந்தால் அல்லது எதையாவது கூறியிருந்தால் நான் நல்லது, நான்... எல்லாம் போய்விட்டது, இப்பொழுது எல்லாம் சுத்தமாக்கப்பட்டுவிட்டது. அது இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது, ஆம், அது இரத்தம் சொட்டிக் கொண்டு இருக்கிறது, பரிசுத்த ஆவி சுவிசேஷம் இரத்தத்தால் சொட்டிக் கொண்டு இருக்கிறது, சத்தியத்திற்காய் மரித்த சிஷர்களின் இரத்தம் அது, இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷம் தொடர்ந்து இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது. என்ன அற்புதமான சமயம்! எவ்வளவு அற்புதமானது! அது உனக்கு ஒரு அற்புதமான வேளையாயிருக்கும், அது எனக்கும் ஒரு அற்புதமான வேளையாயிருக்கும், நம் இராஜனாம் இயேசுவை சந்திக்க நாம் ஆயத்தமானால் என்ன ஓர் அற்புத வேளை அது. அது உனக்கு ஒரு அற்புதமான வேளையாயிருக்கும், அது எனக்கும் ஒரு அற்புதமான வேளையாயிருக்கும், நம் இராஜனாம் இயேசுவை சந்திக்க நாம் ஆயத்தமானால் என்ன ஓர் அற்புத வேளை அது. உங்களுக்கு அதுவிருப்பமா? எல்லாரும், பாருங்கள்! அது உனக்கு ஒரு அற்புதமான வேளையாயிருக்கும், அது எனக்கும் ஒரு அற்புதமான வேளையாயிருக்கும், நம் இராஜனாம் இயேசுவை சந்திக்க நாம் ஆயத்தமானால் என்ன ஓர் அற்புத வேளை அது. 91சபையில் பழமை நாகரீக எழுப்புதல் உள்ளதாக நான் உணர்கிறேன். நீங்களும் உணர்கிறீர்களா? பழமைசுத்தமாக்குதல், தூய்மையாக்குதல்; அருமையான, பழமை அற்புதமான சமயம். நீங்கள் நலமாக உணர்கிறீர்களா? ஓ! நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், பாவிளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவரை துதியுங்கள் இப்பொழுது எல்லாருமாக பாடுவோம். உங்களுக்கு தெரியுமா? எனக்குத் தெரியும். இங்கே வாருங்கள்; சகோதரன் நெவில் இந்த பாடலை நான் நடத்த எனக்கு உதவுங்கள். இப்பொழுது நீங்கள் எல்லாரும், நம்முடைய கரங்களை உயர்த்துவோம், இப்பொழுது என்னுடன் சேர்ந்து பாடுங்கள், இப்பொழுது இக்காலையில். பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதியுங்கள், எல்லா மக்களும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கினது. இப்பொழுது ஒவ்வொருவருமாக, பாடுங்கள்! நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை துதியுங்கள்; எல்லா மக்களும் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் போக்கினது. ஆமென். அது அற்புதமானதல்லவா? முத்தான வெள்ளை நகரம், ஒரு வீடு, ஒரு யாழ், ஒரு கிரீடம் எனக்கிருக்கிறது, இப்பொழுது நான் காத்திருந்து கவனித்து ஜெபிக்கிறேன், கீழே வந்து, யோவான் கண்ட வெள்ளை நகரம். 92(ஆமென். அற்புதம்! ஓ!) இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் எழுந்து நிற்போம். நீங்கள் எல்லாரும் நலமாக உணர்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இன்றிரவு ஆராதனைகளை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் நம்முடைய அருமையான, பழைய முடிவு பாடலை பாடுவோமாக. இயேசுவின் நாமத்தில் பணிந்து, அவரது பாதத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கி, பரலோகில் இராஜாதி இராஜாவாக அவருக்கு முடிசூடுவோம், நம் யாத்திரை முடிவடையும் போது. சரி. இப்பொழுது எல்லாரும் ஒன்றாக பாடுவோம். சரி. இயேசுவின் நாமத்தில் பணிந்து, அவரது பாதத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கி, பரலோகில் இராஜாதி இராஜாவாக அவருக்கு முடி சூடுவோம் நம் யாத்திரை முடிவடையும் போது. விலையேறப் பெற்ற நாமம் (விலையேறப் பெற்ற நாமம்) ஓ, எவ்வளவு இனிமை (ஓ எவ்வளவு இனிமை!) பூமியின் நம்பிக்கை பரலோகத்தின் சந்தோஷம், விலையேறப் பெற்ற நாமம் (விலையேறப் பெற்ற நாமம்) ஓ எவ்வளவு இனிமை! (ஒ எவ்வளவு இனிமை!) பூமியின் நம்பிக்கை பரலோகத்தின் சந்தோஷம். 93என்ன அற்புதமான காலை! என்ன அற்புதமான சமயம்! இப்பொழுது சற்று நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். உங்களுடைய இரட்சகராகிய கிறிஸ்துவை நோக்கி இப்பொழுது ஒவ்வொருவரும் பாருங்கள். அமைதியான விதத்தில், அவருக்கு நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் நீங்கள் செலுத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். கர்த்தாவே என்னுடைய ஆத்துமாவை பரிசுத்தப்படுத்தியதற்காக உமக்கு எவ்வளவாக நன்றியை செலுத்துகிறேன். நீர் எனக்கு செய்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நான் மிகவுமான நன்றியை செலுத்துகிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆவி தாமே நாள் முழுவதும் என் மீது இருப்பதாக. என்னை அது நடத்தும். எனக்கு வழிகாட்டும். ஆசீர்வதியும் என்று கூறுங்கள். தேவன் அந்த ஆசீர்வாதத்தை உங்களுக்கு அளிக்க வேண்டுமென்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. இப்பொழுது நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தியிருக்கையில், சகோதரன் நெவில், நீர் ஜெபம் செய்து கூட்டத்தை கலைத்தருளும்.